AudiobooksBooksStoryTamil AudiobooksYoutube

Kadal Pura Audiobook Part1 Ch4 | Sandilyan

கடல் புறா Kadal Pura Part1 Ch4 Audiobook | Kadal Pura Audio Book | Sandilyan | Mr and Mrs Tamilan

Kadal Pura Audiobook Part1 Ch4 | Kadal Pura Audio Book |கடல் புறா Sandilyan | Mr and Mrs Tamilan

Kadal Pura Audiobook Part1 Ch4 | Kadal Pura Audio Book |கடல் புறா Sandilyan | Mr and Mrs Tamilan,

கடல் புறா எழுத்தாளர் சாண்டில்யன் எழுதிய ஒரு வரலாற்றுப் புதினம். இது சோழரின் படைத்தளபதியான கருணாகரத் தொண்டைமானை கதைத் தலைவனாகக் கொண்ட புதினமாகும். ஸ்ரீ விஜய நாட்டில் இருந்து சோழர் உதவி தேடி வந்த இளவரசருக்கும் அவரது மகளுக்கும் சோழ இளவரசரான அநபாயரும் அவரது படைத்தலைவரான கருணாகர பல்லவனும் உதவுவது கதையின் ஒரு பகுதியாகும். இம்முயற்சிக்கு அநபாயரின் தோழரான அமீர் என்ற அராபியரும் அவரது ஆசானாகிய அகூதா என்ற சீனரும் உதவுகின்றனர்.

அறை விளக்கின்‌ மங்கலான தங்க ஒளியிலும்‌ மங்காத தங்கமெனத்‌ திகழ்ந்த தேக லாவண்யத்துடன்‌ தேவதை போல்‌ நின்று அந்த எழிலரசியைக்‌ கண்டதும்‌ அரை மயக்கத்துக்குள்ளான இளைய பல்லவன்‌, அவள்‌ பேசப்‌ பேசச்‌ சுயநிலையை அடைந்தானானாலும்‌,

அவள்‌ தந்தையின்‌ பெயரை உச்சரித்ததுமே பெரும்‌ அதிர்ச்சியையும்‌ விவரிக்க இயலாத வியப்பையுமடைந்தவனாய்‌, என்ன செய்கிறோமென்பதை அறியாமல்‌,

“யார்‌! யார்‌! இன்‌னொருமுறை சொல்‌!” என்று கூவிக்கொண்டு தனக்கும்‌ அவளுக்குமிருந்ந இடைவெளியை இரண்டே வினாடிகளில்‌ கடந்து,

அவள்‌ இருகைகளையும்‌ தன்‌ கைகளால்‌ இறுகப்‌ பிடித்தக்கொண்டதன்றி அவளைக்‌ கூர்ந்து நோக்கவும்‌ செய்தான்‌.

எதிர்பாராத விதமாக அந்த வாலிபன்‌ திடீரெனத்‌ தன்‌ கையைப்‌ பிடித்ததைக்‌ கண்டு அவள்‌அஞ்சவுமில்லை. இமிறிக்‌ கைகளை விடுவித்துக்‌ கொள்ளவுமில்லை. அவள்‌ விழிகள்‌ நன்றாக உயர்ந்து மிகுந்த கோபத்‌துடன்‌ அவன்‌ விழிகளுடன்‌ விநாடி நேரம்‌ உறவாடின. பவள இதழ்கள்‌ முதலில்‌ வெறுப்புடன்‌ மடிந்து, பிறகு சற்றே விரிந்து சொற்களை உதிர்த்தன. “என்‌ தந்தையின்‌ பெயரை இன்னொரு முறை கேட்க என்‌ அருகே வர அவசியமில்லை.

கைகளைப்‌ பற்றி நெறிக்கவும்‌ தேவையில்லை!” என்றாள்‌ அந்த அழகி, சொல்‌ ஒவ்வொன்றிலும் ‌அனல்‌ வீச கனலை வாரித்‌ தெளித்த, வெறுப்பை அள்ளி வீசிய அந்தச்‌ சொற்களுக்குக்கூட கருணாகர பல்லவனைச்‌ சுயநிலைக்குக்‌ கொண்டு வரும்‌ சக்தி இல்லை. அந்த ஆரம்ப இரவின்‌ சம்பவங்கள்‌ அனைத்தும்‌ ஒன்றன்பின்‌ ஒன்றாக அவன்‌ சிந்தனையில்‌ வலம்‌ வந்ததால்‌, அந்த இரவு தன்னைக்‌ குழப்புவதற்கும்‌ தன்னைத்‌ திரும்பத்‌திரும்ப வியப்பின்‌ வசப்படுத்துவதற்குமே ஏற்பட்டதோ என்ற நினைப்பிலேயே அவன்‌ மனம்‌ ஆழ்ந்து கிடந்தது.

வீரராஜேந்திர சோழ தேவர்‌ அளித்த சமாதானப்‌ பத்திரத்‌துடன்‌ கலிங்கம்‌ வந்தேன்‌. சுங்கச்‌ சாவடியிலே சண்டை மூண்டது. வீரர்களுக்குத்‌ தப்பி ஒர்‌ அறையில்‌ குதிக்கிறேன்‌. யாரைக்‌ காணவும்‌, காக்கவும்‌ மன்னர்‌ உத்தரவிட்டாரோ, அவர்‌ மகள்‌ வாள்‌ முனையில்‌ என்னை வரவேற்கிறாள்‌.

இந்த விந்தைகள்‌ கதைகளில்‌ நிகழ்வதுண்டு. வாழ்க்கையில்‌ விளைவதுண்டா? ” என்று திரும்பத்‌ திரும்ப எண்ணிப்‌பார்த்து, பிடித்த கைகளை விடுவிக்காமலே சில விநாடிகள்‌ மவுனமாக நின்றுவிட்ட கருணாகர பல்லவனை அவள்‌ சொற்கள்‌ மீண்டும்‌ தாக்கின. “தமிழர்‌ பண்பாடு விசித்திரமாயிருக்கிறது இளைய பல்லவரே ! முன்பின்‌ அறியாத பெண்களின்‌ கைகளைப்‌ பிடிக்கும்‌ படிப்பினைதான்‌ தமிழக வாலிபர்களுக்குக்‌ கற்பிக்கப்படுகிறதோ? ” என்று சுடச்சுட அவள்‌ சொற்களை உதிர்த்ததன்றிச்‌ சற்றே திமிறவும்‌ செய்தாள்‌.

அப்படி அவள்‌ சொற்களைச்‌ சுடச்சுட உதிர்த்தாலும்‌, கைகளைத்‌ திமிறியதாலும்‌ ஓரளவு சுயநிலையை அடைந்‌ததன்‌ விளைவாகத்‌ திடீரென அவள்‌ கைகளை விட்டுவிட்டு இளைய பல்லவன்‌, “மன்னிக்க வேண்டும்‌! உணர்ச்சி வேகத்தில்‌ முறை தவறி நடந்துவிட்டேன்‌,” என்று குழம்பிக்‌ குழம்பிச்‌ சொற்களை உதிர்த்த வண்ணம்‌ அவளிடமிருந்தும்‌ திடீரெனத்‌ திரும்பி, கையில்‌ அப்‌பொழுதும்‌ உருவிப்‌ பிடித்திருந்த வாளை உறையில்‌ போட்‌டுக்‌ கொண்டு, தன்னை நிதானத்துக்குக்‌ கொண்டுவரச்‌ சாளரத்துக்காகச்‌ சென்று வெளியே தலை நீட்டி, கீழிருந்த வீதியைக்‌ கவனித்தான்‌.

வீதியில்‌ அப்பொழுதும்‌ வீரர்கள்‌ நடமாட்டம்‌ இருந்தது. தன்னைத்‌ துரத்தி வந்த காவலாட்‌களுடன்‌ குதிரை வீரர்களும்‌ சேர்ந்துகொண்டு விட்டதையும்‌, எதிரும்‌, புதிருமாக வீடுகளின்‌ கதவுகளைத்‌ தட்டிவீரர்கள்‌ சோதனையில்‌ ஈடுபட்டிருந்ததையும்‌ கண்ட அந்த வாலிபன்‌, சோதனை தொடர்ந்து நடந்தால்‌ தான்‌ பிடிபட அதிக நேரமாகாது எனத்‌ தீர்மானித்துக்‌ கொண்டு, மீண்டும்‌ அறையின்‌ உட்புறத்தை நோக்கத்‌ திரும்பினான்‌.

அந்தச்‌ சமயத்திலும்‌ அந்த அழகி இருந்த இடத்தைவிட்டு அசையாமலும்‌ கையில்‌ உருவிப்‌ பிடித்த வாளைச்‌ சுவரின்‌ அணியில்‌ மாட்டாமலும்‌ நின்றிருப்பதைக்‌ கண்டதும்‌ மெல்லப்‌ புன்முறுவல்‌ செய்த இளைய பல்லவன்‌, “இன்னும்‌ வாள்‌ தேவையா? என்னை யாரென்றுதான்‌ தாங்கள்‌ புரிந்துகொண்டு விட்டீர்களே? ” என்றான்‌, நிலைமையைச்‌ சற்றுச்‌ சீர்திருத்த முயன்று

அவள்‌ கருவிழிகள்‌ அவனை மறுபடியும்‌ நன்றாக ஏறஇறங்கப்‌ பார்த்தன. “புரிந்நகொண்டதால்தான்‌ வாள்‌ தேவையாயிருக்கிறது” என்றாள்‌ அவள்‌ இதழ்களில்‌ இகழ்ச்சி நகைகூட்டி.

“என்ன, புரிந்தகொண்டதால்‌ வாள்‌ தேவையாயிருக்‌கிறதா!” சற்று ஆச்சரியத்துடனேயே வினவினான்‌ கருணாகர பல்லவன்‌.

“ஆம்‌.

“நான்‌ கருணாகர பல்லவன்‌ என்பதை அறிந்த பின்புமா இந்த வாளின்‌ உதவி தேவை? “

“பெயரைக்‌ கேட்டதும்‌ தேவையில்லை என்றுதான்‌ எண்ணினேன்‌. ஆனால்‌…!” என்று சொல்லி வாசகத்தை முடிக்காமல்‌ விட்ட அந்த அழக, சிறிது சங்கடத்துக்கும்‌ உள்ளானதைக்‌ கவனித்த இளைய பல்லவன்‌, “ஆனால்‌ என்ன? தைரியமாகச்‌ சொல்லுங்கள்‌” என்று வினவினான்‌.

பெண்மையின்‌ சங்கடத்தின்‌ விளைவாக நிலத்தில்‌ தாழ்த்திய விழிகளை அங்கிருந்து அகற்றாமலே அவள்‌ பதில்‌ சொன்னாள் “கருணாகர பல்லவர்‌ என்ற பெயரைக்‌ கேட்டதும்‌ சற்றுத்‌ துணிவுதான்‌ கொண்டேன்‌. தமிழகத்தின் ‌ பெரும்‌ வீரர்‌ இருக்கும்போது, பெண்களுக்கு எந்தஆபத்தும்‌ நேரிடக்‌ காரணமில்லையென்று நினைத்தேன்‌. ஆனால்‌ முன்பின்னறியாத பெண்ணின்‌ கையைப்‌ பற்றும்‌ பண்பாடு இளைய பல்லவருக்கு உண்டு என்பதை அறிந்தபின்புதான்‌, எதற்கும்‌ வாள்‌ கையிலிருப்பது நல்லது எனத்‌ தீர்மானித்தேன்‌. ”

அவள்‌ வார்த்தைகள்‌ உதிர உதிர அவளை விடப்‌ பன்மடங்கு சங்கடத்தையும்‌ வெட்கத்தையும்‌ அடைந்த கருணாகர பல்லவன்‌, “செய்தது தவறுதான்‌. ஆனால்‌ நினைத்துச்‌ செய்த தவறல்ல. இந்த ஊரில்‌ நான்‌ கால்‌ வைத்த விநாடி முதல்‌ தொடர்ச்சியாக நடந்த சம்பவங்கள்‌ தூண்டிய உணர்ச்சி வேகத்தில்‌ நடந்த தவறு” என்று தட்டுத்‌ தடுமாறிச்‌ சமாதானம்‌ சொன்னான்‌.

பல வீரர்களிடம்‌ தன்னந்தனியே போரிட்டுப்‌ பாலூர்க்‌ கோட்டைக்‌ காவலையும்‌ மீறி வந்திருக்கும்‌ அந்த வாலிபவீரன்‌ தன்னெதிரில்‌ குழந்தைபோல்‌ நிற்பதையும்‌ தட்டுத்‌தடுமாறிச்‌ சமாதானம்‌ சொல்வதையும்‌ கண்ட அவள்‌ இதயத்தில்‌ அவனைப்பற்றி ஏற்பட்ட ஆரம்ப சந்தேகம்‌ மறைந்து அனுதாபம்‌ உதயமானாலும்‌, அதை வெளிக்குக்‌ காட்டாமல்‌ கடுமையாகவே பேச முற்பட்ட அந்த அழகி, உணர்ச்சிகளை அடக்குவதுதான்‌ வீரர்களுக்கு அழகு. இல்லையா? இளைய பல்லவரே? ” என்று வினவினாள்‌.

“உணர்ச்சிகளை அடக்கத்தான்‌ வேண்டும்‌. ஆனால்‌ இரண்டு சமயங்களில்‌ உணர்ச்சிகளை அடக்குவது வீரர்‌களுக்கு அழகுமல்ல, விவேகமுமல்ல” என்றான்‌ இளைய பல்லவன்‌.

“எந்தச்‌ சமயங்கள்‌ அவை? ” என்று கேட்டாள்‌ அவள்‌ வியப்புடன்‌.

“ஒன்று, போரிடும்‌ சமயம்‌. அந்தச்‌ சமயத்தில்‌ வீர உணர்ச்சிக்கு இடம்‌ கொடுக்காதவன்‌ வெற்றியடையவதில்லை. அடுத்தது… ” திடீரென்று பேச்சை நிறுத்தினான்‌ இளையபல்லவன்‌, “அடுத்தது காதல்‌” என்று சொல்ல முற்பட்டவன்‌ தன்‌ யுக்தியையும்‌ தத்துவத்தையும்‌ அளவுக்கு மீறிக்‌ காட்டினால்‌ மேலும்‌ அந்தப்‌ பெண்ணின்‌ இகழ்ச்சிக்‌கும்‌ கோபத்துக்கும்‌ இலக்காக நேரிடும்‌ என்ற எண்ணத்‌தால்‌ சம்பாஷணையை வேறு திசையில்‌ மாற்றி, “எதற்கு வீண்‌ விவாதம்‌? உங்களை எதிர்பாராத விதமாகச்‌ சந்தித்‌தேன்‌.

கதைச் சுருக்கம்:
கலிங்கத்தில் கருணாகர பல்லவன் மேற்கொண்ட சவால்கள், அதனை அநபாய சோழனின் துணையோடு எவ்வாறு முறியடித்தான் என்பதிலிருந்து கதை தொடங்குகிறது. அகூதாவின் உதவியால் கடற்போரின் நுணுக்கங்களை அறிந்து, அகூதாவிடம் பரிசாகப் பெற்ற கப்பலை, தனக்கேற்றவாறு மாற்றி கடல் புறாவை உருவாக்குகிறான்.

கடல்புறாவின் உதவியால் கடல் கொள்ளைக்காரர்களிடமிருந்து சோழ நாட்டு வணிகர்களை காப்பாற்றுகிறான். கடல் மோகினித்தீவில் மஞ்சளழகியை சந்திக்கிறான். மஞ்சளழகி அவனிடம் காதல் வயப்படுகிறாள். தன் கடமையை முன்னிட்டும், காஞ்சனாவின் நினைவாலும் மஞ்சளழகியை ஏற்க முடியாமல் விலகுகிறான். ஆனாலும் அவளை மறக்க முடியாமல் வருந்துகிறான்.

பின் தற்செயலாக காஞ்சனாவை கடல் கொள்ளைக்காரர்களிடமிருந்து காப்பாற்றுகிறான். ஸ்ரீவிஜயத்தைக் கைப்பற்றி சோழப் புலிக்கொடியை பறக்கவிடுகிறான். போரில் தோற்ற ஜெயவர்மனின் வேண்டுகோளின் பேரில் வீரராஜேந்திரசோழர் மஞ்சளழகியையும் கருணாகர பல்லவனுக்கு மணமுடித்து வைக்கிறார்.

Credits -:
Book : கடல் புறா Kadal Pura
Author of book -: சாண்டில்யன்
Copyright © சாண்டில்யன், All rights reserved.


Kadal Pura Part1 Audiobook | Kadal Pura Audio Book | கடல் புறா | Sandilyan | Mr and Mrs Tamilan
Kadal Pura Part2 Audiobook | Kadal Pura Audio Book | கடல் புறா | Sandilyan | Mr and Mrs Tamilan
Kadal Pura Part3 Audiobook | Kadal Pura Audio Book | கடல் புறா | Sandilyan | Mr and Mrs Tamilan

kadal pura,kadal pura book,kadal pura audiobook,kadal pura book pdf free download,kadal pura novel,kadal pura book online,kadal pura characters,kadal pura online reading,kadal pura audiobook free download,kadal pura movie,kadal pura novel in tamil,kadal pura part 3,kadal pura fish,kadal pura in tamil,sandilyan,sandilyan books,sandilyan novels list in tamil download,

sandilyan mma,sandilyan novels,sandilyan best novels,sandilyan novels list,sandilyan kadal pura,sandilyan font download,sandilyan meaning in tamil,sandilyan novels online purchase,sandilyan novel character names,sandilyan audiobooks,sandilyan in tamil,audiobooks,audiobooks free,audiobook apps,audiobooks on spotify,audiobooks for kids,audiobook subscription,audiobooks amazon,audiobook speed calculator,

audiobooksnow,audiobook narrator jobs,audiobook torrenting sites,audiobooks on iphone,audiobook narrator salary,audiobook player,kalki book,kalki books in tamil,kalki book gore vidal,kalki book series,kalki book pdf,kalki book review,kalki book 3 pdf free download,kalki book in hindi pdf,kalki book summary,kalki book 2,kalki book in hindi,kalki books in english,kalki book 3,kalki books list in tamil,

kadal pura,kadal pura audiobook,kadal pura novel in tamil,kadal pura part 1,kadal pura part 3,kadal pura part 2,kadal pura story,kadal pura story line,kadal pura full story,kadal pura sandilyan novel,kadal pura novel,kadal pura audio book free download,kadal pura audiobook,கடல் புறா, Kadal Pura Novel Audiobook,Kadal Pura Audio Book,#KadalPura,

kadal pura,kadal pura audiobook,kadal pura novel in tamil,kadal pura part 3,kadal pura part 1,kadal pura part 2,kadal pura story,kadal pura novel,kadal pura audiobook free,kadal pura audio,kadal pura audiobook free download,kadal pura audiobook part 1,kadal pura audiobook part 2,kadal pura audiobook part 3,sandilyan kadal pura story ,kadal pura sandilyan novel,sandilyan audiobooks,கடல் புறா,kadal pura audio book,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *