Apply e-Register இ-பதிவு செய்வது எப்படி?
Apply e-Register இ-பதிவு செய்வது எப்படி? Work|Marriage|Death|TNeGA
Apply e-Register இ-பதிவு செய்வது எப்படி? Work|Marriage|Death|TNeGA
தமிழகத்தில் கொரோனா பரவலின் காரணமாக பிற மாநிலங்கள், நாடுகளில் இருந்து வர இ பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதே போல தமிழகத்தில் இருந்து வெளியே செல்லவும், ஒரு மாவட்டத்தில் இருந்து, இன்னொரு மாவட்டத்திற்கு செல்லவும் இ பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இது கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழகத்தில் பல்வேறு வகையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கடந்த வாரத்தில் இருந்தே லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது.
அதோடு கட்டுப்பாடுகளை மீறி வெளியே சுற்றித் திரிபவர்களின் வாகனங்கள் பறிமுதல், அபராதம், முகக்கவசம் கட்டாயம் என பல கட்டுப்பாடுகள் உள்ளன. எனினும் மக்கள் பலரும் லாக்டவுனையும் பொருட்படுத்தாமல் நடமாடிக் கொண்டுள்ளனர். ஆக அதனை கட்டுப்படுத்த தற்போது இ பதிவு முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதனால் தற்போது மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல அவசர காரணங்களுக்காக மட்டும் அனுமதிக்கப்படுகின்றனர். எனினும் இதற்கும் இ பதிவு கட்டாயம். ஆனால் இன்றும் பலருக்கும் இந்த இ பாஸூக்கு எப்படி விண்ணப்பிப்பது? என்னென்ன காரணங்களுக்காக விண்ணப்பிக்கலாம். இதற்கு என்னென்ன ஆவணங்கள் தேவை? என பலருக்கும் தெரிவதில்லை.
சரி இ பாஸ் விண்ணப்பிப்பதற்காக அரசின் eregister. tnega. org என்ற இணையத்திற்குள் செல்லுங்கள். அதில் வெளி நாட்டில் இருந்து தமிழகத்திற்கு வருபவர்கள், மற்றவர்கள் என்ற இரு ஆப்சன்கள் இணையத்தில் நுழைந்ததும் இருக்கும்.
இதில் நீங்கள் ஒரு மாவட்டம் விட்டு, இன்னொரு மாவட்டம் செல்ல வேண்டுமெனில் “மற்றவர்கள்” என்ற இரண்டாவது ஆப்சனை கிளிக் செய்யவும். இதே வெளி நாட்டில் இருந்து வருகிறீர்கள் எனில் முதல் ஆப்சனை பயன்படுத்திக் கொள்ளலாம்.
மொபைல் நம்பரை கொடுத்து லாகின் செய்யவும் அடுத்ததாக இது மற்றொரு பக்கத்தில் தொடங்கும். அதில் உங்களது மொபைல் நம்பரை கொடுத்து, அதற்கு கீழாக கொடுக்கப்பட்டுள்ள கேப்சா எண்களை, எதிர்புறம் உள்ள பாக்ஸில் கொடுக்கவும். கொடுத்து கிளிக் செய்யவும்.
இதன் பிறகு பதிவு செய்யப்பட்ட உங்களது மொபைல் எண்ணிக்கு ஒரு ஓடிபி வரும். அதனை கொடுத்து கிளிக் செய்தால், அது மற்றொரு பேஜில் தொடங்கும்
மூன்று ஆப்சன்கள் இந்த புதிய பக்கத்தில் தனி நபர் மற்றும் குழு சாலை வழி பயணம், தனி நபர்/குழு ரயில் பயணம்/விமான வழி தமிழகத்தில் நுழைதல், தொழில் நிறுவனங்கள் என்ற மூன்று ஆப்சன்கள் இருக்கும். அதில் நீங்கள் எந்த வகையோ அதனை கிளிக் செய்தால், அது மற்றொரு அப்ளிகேஷன் பக்கத்தில் தொடங்கும்.
எங்கு செல்கிறீர்கள்? அதில் எதற்காக நீங்கள் இ பாஸ் விண்ணப்பிக்கிறீர்கள், எங்கு செல்ல வேண்டும். உங்களின் பயண தேதி என்ன? நீங்கள் பயணம் செய்வதற்கான ஆவணம் என பலவற்றையும் கொடுக்க வேண்டும். உதாரணத்திற்கு நீங்கள் மருத்துவமனைக்கு செல்கிறீர்கள் என்றால் அதற்கான ஆவணத்தினை கொடுக்கலாம். இல்லையேல் தொழில் ரீதியாக செல்கிறீர்கள் என்றால் அதற்கான ஆவணத்தினை கொடுக்க வேண்டும்.
என்னென்ன விவரங்கள் கொடுக்க வேண்டும்? அதோடு விண்ணப்பதாரரின் பெயர், அதற்கான ஆவணம், அடையாள சான்றுகளில் ஏதேனும் ஒன்று, அதனை ஸ்கேன் செய்து (1 எம்பி அளவில்) பதிவேற்றம் செய்ய வேண்டும். அதோடு உங்களுடன் எத்தனை பேர் பயணிக்க போகிறார்கள். என்ன வாகன வகை, வாகனத்தின் எண் என்ன? கொடுத்து சப்மிட் கொடுக்கவும். உங்களது விவரங்கள் சரிபார்க்கப்பட்டு, பின்னர் சரியாக இருக்கும்பட்சத்தில் உங்களுக்கு இ பதிவு வழங்கப்படும்.
e registration online,e register tamilnadu,e registration,e registration tamil nadu,e register,e register online,e registration certificate,epass tamilnadu online apply,epass,epass tamil,epass news tamil,epass kerala online apply,
epass industry tamil nadu,industrial epass tamilnadu ,industrial epass,work epass tamilnadu,work epass,e register tnega,e register.tnega.org,