Kadal Pura Audiobook Part1 Ch21 Sandilyan
Kadal Pura Audiobook Part1 Ch21 | கடல் புறா Sandilyan | Mr and Mrs Tamilan
Kadal Pura Audiobook Part1 Ch21 | கடல் புறா Sandilyan | Mr and Mrs Tamilan
Kadal Pura Audiobook கடல் புறா எழுத்தாளர் சாண்டில்யன் எழுதிய ஒரு வரலாற்றுப் புதினம். இது சோழரின் படைத்தளபதியான கருணாகரத் தொண்டைமானை கதைத் தலைவனாகக் கொண்ட புதினமாகும். ஸ்ரீ விஜய நாட்டில் இருந்து சோழர் உதவி தேடி வந்த இளவரசருக்கும் அவரது மகளுக்கும் சோழ இளவரசரான அநபாயரும் அவரது படைத்தலைவரான கருணாகர பல்லவனும் உதவுவது கதையின் ஒரு பகுதியாகும். இம்முயற்சிக்கு அநபாயரின் தோழரான அமீர் என்ற அராபியரும் அவரது ஆசானாகிய அகூதா என்ற சீனரும் உதவுகின்றனர்.
“காஞ்சி இருக்கக் கலிங்கம் குலைந்த களப் போர் பாடத் திறமினோ” என்று “கலிங்கத்துப் பரணியில், பரணிக்கோர் புலவரான செயங்கொண்டார் தமிழக மகளிரை அறைகூவி அழைத்து, மகளிர் தத்தம் கணவருடன் நடத்திய கலவிப் போரையும் கழற்சென்னியான முதலாம் குலோத்துங்கன் கலிங்கத்தின்மீது நடத்திய ஆயுதப்போரையும் சிலேடை கோத்துப் பாடியது பல வருஷங்களுக்குப் பின்புதானென்றாலும்,
அந்தப் போருக்கு வித்திடுவதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பே காரணமாயிருந்த கலிங்கத்தின் பாலூர்ப் பெருந்துறை, சித்திரா பவுர்ணமியின் அந்திமாலை நேரத்தில் இயற்கை வனப்பின் எல்லையை எட்டிக் கொண்டிருந்தாலும், இயற்கை வனப்புடன் இணையும் எத்தனை எத்தனையோ செயற்கைக் கஷ்டங்களையும் சுட்டிக்காட்டிக் கொண்டுதானிருந்தது.
மாலைக் கதிரவன் தன் மஞ்சள் நிறக் கதிர்களை எதிரேயிருந்த வங்கக் கடலின் நீலநிற அலைகளின்மீது பாய்ச்சி, மயில்துத்தத்தை தங்கமாக அடிக்கும் ரசவாதியைப்போல, அலைகளின் நிறத்தைப் பொன்னிறமாக மாற்றிக்கொண்டிருந்தாலும், அந்த மாற்றமும் ரசவாதி அகன்றவுடன் மறைந்துவிடும் மாயாஜாலத்தைப்போலவே, ஆதவன் மறைய அகன்று அகன்று சிருஷ்டியின் அநித்தியத்தை நிரூபித்துக்கொண்டிருந்தது.
அத்தகிரியில் தோன்றி மைஞ்சூரை, பூரணை, பிராணிஹிதை, பேன கங்கை, வேணு கங்கை, இந்திரவதி ஆ கிய ஆறு உபநதிகளையும் சேர்த்தணைத்துக் கொண்டதால் பிரும்மாண்டமாகப் பெருகித் தொண்ணூறு காததூரம் ஓடிவந்த களைப்பைப் போக்கிக்கொள்ள பாலூர்ப் பெருந்துறைக் கருகல் கடற்கணவனுடன் வேகமாக மோதிக் கலந்துவிட்ட புண்ய நதியான கோதாவரியின் வண்டல் கலந்த செந்நிற நீரும் ஆதவனுக்குத் துணை செய்து நீலக்கடலின் நிறத்தை சங்கமப் பகுதியில் சிறிது தங்கமாக மாற்றியதென்றாலும்,
மாலை நேரக் காற்றால் திரும்பத் திரும்ப எழுந்த பெரும் அலைகள் கோதாவரியின் பொன்னிற நீருக்கும், பழைய மயில் துத்தத்தின் நிறத்தையே அளித்துப் பிற்காலத்தில் இந்தக் கலிங்கத்தின் பொன்னும் மணியும் சூறையாடப்படும், நிலைப்பது மதிப்பற்ற மயில்துத்தம் தான் என்பதை அறிவுறுத்திக் கொண்டிருந்தன.
சில வருஷங்களுக்குள்ளாகவே கலிங்க நாடு நிலைகுலைந்து கலங்கிப் போய் விடும் என்பதை முன்கூட்டி அறிவிக்க விரும்பியதுபோல் ஓரத்தே அடிக்கடி கலங்கிப் பொன்னிறம் பெற்ற வங்கக்கடல்நீரை வானிலிருந்து கவனித்த இரண்டொரு வெண்ணிற மேகங்களுக்கும் அந்திச்சூரியன் தனது பொன்னிறத்தைப் பூசத்தான் முயன்றான்.
ஆனால் அந்த மாயையிலிருந்து தப்ப முயன்றனபோல் மேகத் துண்டுகள் இழக்கு நோக்கி நகர்ந்து கொண்டிருந்தன. கோதாவரியின் முகத்துவாரத்தை அடுத்தாற்போல் பிரும்மாண்டமாக எழுந்த பெரும் கோட்டை மதில்களுக்குப் பின்னாலிருந்த அரண்மனை உப்பரிகை உச்சியில் தெரிந்த கலிங்கத்தின் பெருங்கொடி தனக்கு நிகரில்லையெனக் காற்றில் படபடத்துக் கொண்டிருந்தாலும்,
எதிரே கடலில் நங்கூரம் பாய்ச்சி நின்ற பல நாட்டுக் கப்பல்களின் கொடிகள், அலைகளால் உந்தப்பட்ட நாவாய்கள் முன்னும் பின்னும் ஆடியதன் விளைவாக, தங்கள் கொடி மரங்களுடன் முன்னால் முன்னால் சாய்ந்து “சக்கரம் உனக்குத் தண்டனை இருக்கிறது.