Kadal Pura Audiobook Part1 Ch6 |கடல் புறா Sandilyan
Kadal Pura Audiobook Part1 Ch6 |கடல் புறா Sandilyan
Kadal Pura Audiobook Part1 Ch6 |கடல் புறா Sandilyan | Mr and Mrs Tamilan
Kadal Pura Audiobook கடல் புறா எழுத்தாளர் சாண்டில்யன் எழுதிய ஒரு வரலாற்றுப் புதினம். இது சோழரின் படைத்தளபதியான கருணாகரத் தொண்டைமானை கதைத் தலைவனாகக் கொண்ட புதினமாகும். ஸ்ரீ விஜய நாட்டில் இருந்து சோழர் உதவி தேடி வந்த இளவரசருக்கும் அவரது மகளுக்கும் சோழ இளவரசரான அநபாயரும் அவரது படைத்தலைவரான கருணாகர பல்லவனும் உதவுவது கதையின் ஒரு பகுதியாகும். இம்முயற்சிக்கு அநபாயரின் தோழரான அமீர் என்ற அராபியரும் அவரது ஆசானாகிய அகூதா என்ற சீனரும் உதவுகின்றனர்.
ஸ்ரிவிஜய சாம்ராஜ்யத்தின் மாபெருங் கதையே தன் கதையென முகவுரை துவங்கி அந்தக் கதையை விவரிக்கவும் முற்பட்ட குணவர்மன், கதையை உடனடியாக எடுத்துச் சொல்ல முடியாமல் மயங்கியும் தயங்கியும் நின்று நிலை தடுமாறி அறையில் அப்படியும் இப்படியும் சிலவிநாடிகள் உலவி, தனக்குள் ஏதோ முணுமுணுத்துக் கொண்டான்.
துவங்கிய கதையைச் சொல்லவும் முடியாமல், மெல்லவும் மாட்டாமல் அவன் திணறித் திண்டாடுவதைக் கண்ட இளையபல்லவன் அவனை ஏதும் கேட்காமல், கவலை தோய்ந்த அவன் வதனத்தையும், அத்தனை கவலையிலும் தளராமல் திடமாகவும், கம்பீரமாகவும் நின்ற அவன் சரீரத்தையும் கண்களால் அளவெடுத்தான்.
குணவர்மன் கிட்டத்தட்டத் தன் உயரமே இருப்பதையும், அவனுக்கு வயது நாற்பத்தைந்துக்கு மேலிருக்க முடியாதென்றாலும், தலையிலிருந்து பாய்ந்த கேசத்தின் சில பகுதிகளும், முகத்தின் குறுக்கே கவலை உழுதுவிட்டிருந்த இரண்டொரு கோடுகளும், அவன் தோற்றத்துக்குப் பத்து வயதைக் கூட்டியே சொல்லும் நிலைமையில் வைத்இருந்ததையும், கவனித்த கருணாகர பல்லவன், இவன் வாழ்க்கையில் பெரிதும் அல்லல்பட்டிருக்க வேண்டும்” என்று தனக்குள் சொல்லிக்கொண்டான்.
இத்தனை கவலையிலும் அவன் உதடுகளில் காஞ்சனாதேவியின் உதடுகளிலிருந்த உறுதியும் துடிப்புமிருந்ததைப் பார்த்த பல்லவ வீரன் கடாரத்தின் இளவரசன் எந்த அசந்தர்ப்பநிலையிலும் துன்பத்திலும் மனத்தை மட்டும் தளரவிடாத இரும்புத் திடம் வாய்ந்தவன் என்பதைப் புரிந்தகொண்டான்.
அத்தனை திடமும் உறுதியுமிருந்தாலும், இவன் முகத்திலோ கைகளிலோ வடுக்கள் ஏதுமே இல்லாததையும் கவனித்து அரசியல் தொல்லைதான் இவனுக்கு அதிகமே தவிர வாளைச் சுழற்றும் வேலை இவனுக் இருக்கக் காரணமில்லை. இவன் போர்களில் அதிகமாக ஈடுபடாதவன்” என்று தனக்குள்ளேயே முடிவு கட்டிக் கொண்டதன்றி, “அப்படியிருக்க இவன் பெண்ணுக்கு மட்டும் திறமையான வாள்பயிற்சியை எதற்காக அளித்திருக்கிறான் ?? என்று தன்னைத்தானே கேட்டுக் கொள்ளவும் செய்தான்.
மிதமிஞ்சிய கவலையாலும், ஸ்ரிவிஜய சாம்ராஜ்யத்தைப் பற்றிய நினைப்பாலும் எண்ணங்கள் உள்ளத்தில் எழுந்து அலைமோதிக் கொண்ட்டி ருந்த அந்த நிலையில்கூட குணவர்மனின் கண்கள், இளைய பல்லவனது விழிகள் பாய்ந்த இடங்களையும், அப்படிப் பாய்ந்தததின் விளைவாக முகத்தில் உலவிய எண்ணங்களையும் கவனிக்கத் தவறாததால், அவன் இதழ்களில் வருத்தம் கலந்த புன்முறுவலொன்று தவழ்ந்தது.
அதற்குக் காரணம் சொல்ல அவன் முனைந்தபோது அவன் சொற்களிலும் அந்த வருத்தம் பிரதிபலித்தே நின்றது. “இளைய பல்லவர் நினைப்பதில் தவறில்லை. நான் வாள்போரில் அதிகமாக ஈடுபடாதவன்தான் அதற்குக் காரணமிருக்கிறது” என்று குணவர்மன் மெல்ல மெல்லச் சொற்களை உதிர்த்தான்.
வாள்போரில் துறனிருந்தாலும் இல்லாவிட்டாலும், முகபாவத்திலிருந்தே பிறர் உணர்ச்சிகளை ஊடுருவிப் பார்க்கும் சக்தி கடாரத்தின் இளவரசனுக்கு மிதமிஞ்சி இருந்ததைக் கவனித்த கருணாகர பல்லவன், பெருவியப்பை அடைந்தானானாலும் அதை வெளிக்குக் காட்டாமல், “கடாரத்தின் இளவரசர் மீது எந்தக் குறையையும் கற்பிக்கும் நோக்கம் எனக்கில்லை” என்று ஏதோ சமாதானம் சொல்ல முயன்றவனை இடையிடையே தடுத்த குணவர்மன், “இளைய பல்லவரே! இதற்குச் சமாதானம் ஏதும் தேவையில்லை.
தமிழகத்தின் இணையற்ற வீரனெனப் பெயரெடுத்த உமது கண்கள், மற்றவர்களிடத்திலும் வீரத்தன் அடையாளங்களை எதிர்பார்ப்பது நியாயம்தானே? அந்தக் குறிக்கோளேதும் தென்படாதபோது, “இவன் வீரன்தானா? ” என்ற சந்தேகமே உமக்கு ஏற்படுவதும் இயற்கைதான். ஆனால் இதிலும் என் வாழ்க்கையில் சில மர்மங்கள் கலந்திருக்கின்றன,” என்றான். “அரசனாயிருப்பவன் வாள்போர் பயிலாததற்கும் இவன் வாழ்க்கை மர்மங்களுக்கும் என்ன சம்பந்தமிருக்க மூடியும். ஒருவேளை இவன் கோழையாயிருப்பானோ? கோழைத்தனத்தை மறைப்பதற்குக் காரணங்களைக் கண்டு பிடிக்கிறானோ? என்று சிந்தனை வசப்பட்ட கருணாகர பல்லவன் மீண்டும் தன் கண்களால் குணவர்மனது முகத்தை ஆராய்ந்தான்.
கவலை தோய்ந்து இடந்த அந்தச் சந்தர்ப்பத்திலும், ஈட்டிகள்போல் ஜொலித்த குணவர்மனின் கண்களைக் கண்டதும், சேச்சே! நாம் நினைத்தது தவறு. இத்தகைய கண்களை உடையவன் ஒருகாலும் கோழையாயிருக்க முடியாது, என்ற முடிவுக்கு வந்த இளைய பல்லவன் மேற்கொண்டு ஏதும் பேசாமல் குணவர்மனது கதையைக் கேட்க ஆயத்தமானான்.
குணவர்மனது அந்தச் சில நிமிஷங்களில் தன் தயக்கத்தை உதறிக்கொண்டு, இளைய பல்லவனை நோக்க, “இளைய பல்லவரே! நான் கடாரத்தின் இளவரசனாயிருக்கும் காரணம் தெரியுமா உமக்கு? ” என்று ஒரு கேள்வியை வீசினான். “தெரியாது குணவர்மரே! தாங்கள் சொல்லித்தான் தங்களைப் பற்றிய விவரம் எதையும் நானறிய முடியும். சில நாழிகைகளுக்கு முன்புதானே நாம் சந்தித்திருக்கிறோம்!” என்று கருணாகர பல்லவன் பதில் கூறினான்.
“உண்மைதான் இளைய பல்லவரே” என்று சொல்லித் தலையையும் அசைத்து ஆமோதித்த குணவர்மன், “நான் கடாரத்தின் இளவரசனாயிருப்பதற்கு என் ஆசை காரணமல்ல. உண்மையில், கடாரத்தின் ஆட்சி பீடத்தையும் அந்த ஆட்சிபீடம் அளிக்கும் அதிகாரத்தையும், அந்தஸ்தையும், செல்வாக்கையும் அனைத்தையும் வெறுக்கிறேன். கடாரத்தின் இளவரசுப் பதவி என் தந்தையால் என்மீது சுமத்தப்பட்டது. என் இஷ்டத்திற்கு விரோதமாக,” என்று பதில் கூறிய குணவர்மன், “இதைக் கேட்க உங்களுக்கு விசித்திரமாயிருக்கலாம் இளைய பல்லவரே! ஆனால் உண்மை அதுதான். ஆட்சிபீடத்தை நான் வெறுக்கவே செய்கிறேன். ஆனால் அது என்னைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருக்கிறது. இது உலக விசித்திரம். வேண்டாதவனிடம் பதவி ஒட்டிக் கொள்கிறது. வேண்டுபவனை வெட்டி விலக்கித் தள்ளுகிறது” என்றான்.
குணவர்மன் சொன்னது பெரும் விசித்திரமாயிருந்தது இளையபல்லவனுக்கு. “ஆட்சியில் வெறுப்பிருந்தால் சோழ நாட்டின் உதவியை ஏன் நாடுகீறீர்கள் ? கடாரத்தின் மீது படையெடுத்து, ஜெயவர்மனை முறியடித்து ஸ்ரிவிஜய சாம்ராஜ்யத்தை என்னிடம் ஒப்படைக்க வேண்டும், என்று சோழப் பேரரசர் வீரராஜேந்திரருக்கு நீங்கள் ஓலையே அனுப்பியிருந்தீர்களே ? ” என்று வினவினான் இளைய பல்லவன்.
இந்தக் கேள்வியால் சிறிதும் கலங்காத குணவர்மன் திடமாகவே பதில் சொன்னான், “ஓலை அனுப்பியிருந் தேன், இளைய பல்லவரே! அரச பதவியை நாடித்தான் இங்கும் வந்திருக்கிறேன். முடிந்தால் ஜெயவர்மனை விரட்டி அரசபீடத்தில் உட்காரவும் உத்தேசம்தான்.
ஆனால் இத்தனையிலும், பற்று சிறிதுமில்லாமலே ஈடுபட்டிருக்கிறேன். இவையனைத்திலும் கடமை சம்பந்தப் பட்டிருக்கிறது. எந்த சைலேந்திர வம்சத்தில் நான் பிறந்தேனோ அந்த சைலேந்திர வம்சத்தைப் பற்றிய கடமை அது. ஸ்ரிவிஜய சாம்ராஜ்யத்தின் மக்களுக்கு நான் செலுத்த வேண்டிய கடமை அது. கடமைதான் என்னை இங்கு இழுத்து வந்திருக்கிறது இளையபல்லவரே! ஆசை அல்ல? ” அத்துடன் மேலும் பேசத் துவங்கிய குணவர்மன், “இளைய பல்லவரே! இதைத்தான் நான் ஆரம்பத்திலேயே சொன்னேன்.
ஸ்ரிவிஜய சாம்ராஜ்யத்தின் கதைதான் என் கதை என்று, கேளும் அந்தக் கதையை,” என்று கூறி, இளைய பல்லவனை விட்டுத் திரும்பி அந்த அறையின் கிழக்குப் பகுதியிலிருந்த பெரும் சாளரத்தைத் திறந்து வெளியே நீண்ட நேரம் நோக்கிக் கொண்டு பேசாமலே நின்றான். பல நிமிஷங்கள் கழித்துத் திரும்பிய குணவர்மனின் கண்கள் ஏதோ கனவுலகத்தில் சஞ்சரிப்பன போல் காணப்பட்டன. அதுவரை கவலை மண்டிக்கிடந்த வதனத்தில் சாந்தியும் பெருமையும் நிலவிக் கிடந்தன.
அந்தக் கனவுக் கண்களால் இளைய பல்லவனையும் தனது புதல்வியையும் மாறிமாறிப் பார்த்துவிட்டுத் தன் ஒரு கையை உயர்த்தி, சாளரத்தை நோக்கி நீட்டி, “இளைய பல்லவரே ! இந்தச் சாளரத்துக்கு வெளியே நீர் கண்களைச் செலுத்தினால், நீலக் கடல்தான் உமது கண்களுக்குத் தெரியும். ஆனால் என் கண்களுக்குத் தெரிவது அதுமட்டு மல்ல. அந்தக் கடலுக்கப்பாலுள்ள சைலேந்திரர்களின் மாபெரும் அரசான ஸ்ரிவிஜய சாம்ராஜ்யம் தோன்றுகிறது.
பலப்பல தீவுகள் தோன்றுகின்றன. கடாரம் தோன்றுகிறது. சொர்ணத் தீவும், சாவகமும், பாலியும் தோன்றுகின்றன. அந்தத் தீவுகளில் தினம் தனம் வந்து குவியும் வணிகப் பொருள்களும் தோன்றுகின்றன. அத்தனை வணிகப் பொருள்கள் அங்கு ஏன் வந்து குவிகின்றன? காரணம் இருக்கறது. இளையபல்லவரே ! பலமான கார்ணம் இருக்கிறது. உலகத்தில் சகல நாட்டினரும் விரும்பும் தங்கம் அந்தத் தீவுகளில் இருக்கின்றது. அதனால்தான் பழைய கிரேக்க மாலுமிகள் அவற்றை கிரிஸே தங்கம் தீவு என்றும், சொர்ணத் தீவு என்றும் சொர்ண பூமியென்றும் பலபடிப் பெயரிட்டு அழைத்தார்கள். அந்தத் தீவுகளில் உள்ள மண்ணில் பொன் கலந்திருக்கிறது. மண்ணை நீரில் போட்டால் தங்கம் பிரியும் அளவிற்குப் பொன் மண்ணுடன் இணைந்து கிடக்கிறது.
Credits -:
Book : கடல் புறா Kadal Pura
Author of book -: சாண்டில்யன்
Copyright © சாண்டில்யன், All rights reserved.
Kadal Pura Part1 Audiobook | Kadal Pura Audio Book | கடல் புறா | Sandilyan | Mr and Mrs Tamilan
Kadal Pura Part2 Audiobook | Kadal Pura Audio Book | கடல் புறா | Sandilyan | Mr and Mrs Tamilan
Kadal Pura Part3 Audiobook | Kadal Pura Audio Book | கடல் புறா | Sandilyan | Mr and Mrs Tamilan
kadal pura,kadal pura book,kadal pura audiobook,kadal pura book pdf free download,kadal pura novel,kadal pura book online,kadal pura characters,kadal pura online reading,kadal pura audiobook free download,kadal pura movie,kadal pura novel in tamil,kadal pura part 3,kadal pura fish,kadal pura in tamil,sandilyan,sandilyan books,sandilyan novels list in tamil download,sandilyan mma,
sandilyan novels,sandilyan best novels,sandilyan novels list,sandilyan kadal pura,sandilyan font download,sandilyan meaning in tamil,sandilyan novels online purchase,sandilyan novel character names,sandilyan audiobooks,sandilyan in tamil,audiobooks,audiobooks free,audiobook apps,audiobooks on spotify,audiobooks for kids,audiobook subscription,audiobooks amazon,
audiobook speed calculator,audiobooksnow,audiobook narrator jobs,audiobook torrenting sites,audiobooks on iphone,audiobook narrator salary,audiobook player,kalki book,kalki books in tamil,kalki book gore vidal,kalki book series,kalki book pdf,kalki book review,kalki book 3 pdf free download,kalki book in hindi pdf,kalki book summary,kalki book 2,kalki book in hindi,kalki books in english,kalki book 3,kalki books list in tamil,
kadal pura,kadal pura audiobook,kadal pura novel in tamil,kadal pura part 1,kadal pura part 3,kadal pura part 2,kadal pura story,kadal pura story line,kadal pura full story,kadal pura sandilyan novel,kadal pura novel,kadal pura audio book free download,kadal pura audiobook,கடல் புறா, Kadal Pura Novel Audiobook,Kadal Pura Audio Book,#KadalPura,
kadal pura,kadal pura audiobook,kadal pura novel in tamil,kadal pura part 3,kadal pura part 1,kadal pura part 2,kadal pura story,kadal pura novel,kadal pura audiobook free,kadal pura audio,kadal pura audiobook free download,kadal pura audiobook part 1,kadal pura audiobook part 2,kadal pura audiobook part 3,sandilyan kadal pura story ,kadal pura sandilyan novel,sandilyan audiobooks,கடல் புறா,kadal pura audio book,