Kadal Pura Audiobook Part1 Ch7 | கடல் புறா Sandilyan
Kadal Pura Audiobook Part1 Ch7 | கடல் புறா Sandilyan
Kadal Pura Audiobook Part1 Ch7 | Kadal Pura Audio Book | கடல் புறா Sandilyan | Mr and Mrs Tamilan
Kadal Pura Audiobook கடல் புறா எழுத்தாளர் சாண்டில்யன் எழுதிய ஒரு வரலாற்றுப் புதினம். இது சோழரின் படைத்தளபதியான கருணாகரத் தொண்டைமானை கதைத் தலைவனாகக் கொண்ட புதினமாகும். ஸ்ரீ விஜய நாட்டில் இருந்து சோழர் உதவி தேடி வந்த இளவரசருக்கும் அவரது மகளுக்கும் சோழ இளவரசரான அநபாயரும் அவரது படைத்தலைவரான கருணாகர பல்லவனும் உதவுவது கதையின் ஒரு பகுதியாகும். இம்முயற்சிக்கு அநபாயரின் தோழரான அமீர் என்ற அராபியரும் அவரது ஆசானாகிய அகூதா என்ற சீனரும் உதவுகின்றனர்.
கலிங்கத்திற்குத் தென் கிழக்கிலும் தமிழகத்துக்கு நேர் கிழக்கிலும் வங்கக் கடலுக்கு அக்கரையில் விரிந்த ஸ்ரிவிஜய சாம்ராஜ்யத்தின் பெரும் சரித்திரத்தையும், துன்பமும் துரதிர்ஷ்டமும் கலந்த அதன் சோகக் கதையையும் குணவர்மன் சொல்லி முடித்ததும் முடிக்காததுமாக, அவன் துயரத்தைத் துடைக்க வந்த தேவதூதன்போல் சாளரத்தின் மார்க்கமாக ஏதோ புயலால் உந்தப்பட்டது போல் வெகுவேகமாகச் சிறகடித்துக் கொண்டு வெண்புறா ஒன்று உள்ளே வந்து, சற்று அப்பாலிருந்த ஒரு மஞ்சத்தின் முகப்பில் உட்கார்ந்து அறையிலிருந்த மூவரையும் இரண்டு மூன்று முறை தலையை அசைத்து அசைத்து உற்றுப் பார்த்தது.
வீடுகளில் புறாக்கள் வளர்க்கப்படுவதோ, தப்பிய ஓரிரு புறாக்கள் எதிர் இல்லங்களுக்குப் பறந்து சென்றுவிடுவதோ அப்படியொன்றும் வியக்கத்தக்க விஷய மல்லவென்றாலும், உள்ளே வந்த புறாவின் அபரிமித வளர்ச்சியும், அதன் கால்களுக்கிருந்த அளவுக்கதிகப்பட்ட நீளமும், மிகப் பெரிய அலகும் சாதாரணமாக அது கலிங்கத்திலோ தமிழகத்திலோ காணப்படும் புறாவல்லவென்பதை நொடிப் பொழுதில் உணர்ந்து கொண்ட இளைய பல்லவனே மற்ற இருவரும் வியப்பிலிருந்து மீளுமுன்பாகத் தன்னை நிதானப்படுத்திக் கொண்டு சரேலென்று எழுந்து சென்று அந்தப் பெரும் புறாவைத் தன் இரு கைகளாலும் பிடித்து எடுத்தான்.
அப்படி அவன் எடுத்துப் பிடித்துத் தடவிக் கொடுத்த போதும் அது எந்த வித சத்தத்தையும் களப்பாமல் திரும்பத் திரும்ப விழித்ததைக் கண்ட காஞ்சனாதேவி, மஞ்சத்திலிருந்து எழுந்து அவனிடம் வந்து, “அதோ, அந்தப் புறாவை இப்படி என்னிடம் கொஞ்சம் கொடுங்கள்” என்று கொஞ்சும் சொற்களைக் கொண்டு கெஞ்சினாள்.
ஆனால் இளைய பல்லவன் அவளுக்குப் பதிலேதும் சொல்லாமலும், அவள் கேட்டபடி புறாவைக் கொடுக்காமலும் அந்தப் புறாவைத் திரும்பத் திரும்ப உற்றுப் பார்த்து விட்டுத் திடீரென சாளரத்தை நோக்கிச் சென்று வெளியே எட்டி நீண்ட நேரம் எதிர்சாரியிலிருந்த மாளிகைகளில் கண்களை ஓட்டினான்.
தப்பிச் சாளரத்துக்குள் ஓடிவந்து விட்ட புறாவைக் கண்டு முதலில் வியப்புக்குள்ளான குணவர்மனும் காஞ்சனாதேவியும் இளைய பல்வனின் அந்தப் புறா ஆராய்ச்சியையும், சாளரத்திடம் ஓடி வெளியே பார்த்து அவன் நடத்திய சோதனையையும் கண்டு அவற்றுக்குக் காரணம் புரியாதவர்களாய் அவனே வந்து விவரிக்கட்டுமென்று பேசாமலே நின்றுகொண்டி ருந்தனர்.
நீண்ட நேரம் வெளியே யாரையோ பார்க்க முயன்றும் முடியாமையால், ஏமாற்றப் பெருமூச்சு விட்டுக் கொண்டு மீண்டும் அறையின் நடுவுக்கு வந்த இளைய பல்லவன் கடாரத்தின் அரசகுமாரியை நோக்க, “காஞ்சனாதேவி! அதோ அந்த மூலையிலுள்ள தீபத்தைச் சற்று அருகில் கொண்டு வாருங்கள். இந்தப் புறாவைப் பரிசோதித்துப் பார்ப்போம்” என்று கூறினான்.
அரசகுமாரியின் அஞ்சன விழிகள் ஆச்சரியத்தால் மலர்ந்தன. “இன்னும் சோதிப்பதற்கு என்ன இருக்கிறது அதில்? இத்தனை நேரந்தான் துருவித் துருவிப் பார்த்தீர்களே” என்று அவள் சொற்கள் இனிமையுடன் உதிர்ந்தன. சாதாரண சமயமாக இருந்தால் அந்த இனிமையில் இளையபல்லவன் இதயத்தைப் பறிகொடுத்திருப்பான்.
ஆனால் அவன் இதயமும் சித்தமும் அந்தப் புறாவிடமேலயித்திருந்ததால் அந்த இனிமையைக்கூட கவனிக்காதவனாய், “அரசகுமாரி! இந்தப் புறாவை அத்தனை எளிதில் சோதித்துவிட முடியாது. சற்று அந்த விளக்கை எடுத்து வாருங்கள். நம் மூவர் கதியையும் இந்தப் புறாவே ஒருவேளை நிர்ணயிக்கக்கூடும்,” என்றான்.
இதைக் கேட்ட அரசகுமாரி மட்டுமின்றி அதுவரை சோகத்தின் பிம்பமாயிருந்த குணவர்மன்கூட வியப்புக் குள்ளானதால் அவனும் கேட்டான் “இதென்ன வித்திரம் இளையபல்லவரே? இந்தப் புறாவா நமது கதியை நிர்ணயிக்க முடியும்? என் நாட்டின் பெரும்படைகளே அதை நிர்ணயிக்க முடியும்? “
இளையபல்லவனின் இடது கை புறாவைப் பிடித்திருந்தது. வலது கை அதை மெல்லத் தடவிக் கொடுத்துக் கொண்டிருந்தது. அத்துடன் குணவர்மன் கூறியதைக் கேட்டதும், அவன் இதழ்கள் இளநகை புரிந்தன. “அண்டவன் படைப்பில் எது அதிக பலமுள்ளது. எது சொற்பப் பலமுள்ளது என்பதை மனிதன் நிர்ணயிக்க முடியாது குணவர்மரே. மனிதனுக்குச் சிறு அலுவலைப் புரிவதற்கும் பெரும் ஆயுதங்கள் தேவை. ஆண்டவன் இஷ்டத்துக்கு வளைந்து கொடுக்கச் சிறு துரும்பும் போதும். உமது படைகள் சாதிக்க முடியாததை இந்த அற்பப் பறவை சாதித்தாலும் சாதிக்கும்” என்ற கருணாகர பல்லவன், “குணவர்மரே ! உமது நாட்டில் புறாக்கள் இருக்கின்றனவா? ” என்று ஏதோ சந்தேகம் கேட்பவன்போல் கேள்வியொன்றையும் விடுத்தான்.
இந்தக் கேள்வியின் அர்த்தத்தைப் புரிந்துகொள்ள முடியாத குணவர்மன் தன் மகளின் முகத்தை ஒருமுறை பார்த்துவிடடு, பிறகு கருணாகர பல்லவனை நோக்கு,“புறாக்கள் இருக்கின்றன. அதற்கென்ன? ” என்று வினவினான்.
“பெரும் புறாக்கள்? ” என்று மீண்டும் அழுத்திக் கேட்டான் இளையபல்லவன்.
“இருக்கின்றன. சாவகத் தீவின் அடர்த்தியான காடுகளில் இருக்கின்றன” என்றான் குணவர்மன்.
இந்தப் பதிலைக் கேட்டதும் குணவர்மனை நோக்கி இரண்டடி எடுத்து வைத்த கருணாகர பல்லவன், “இருக்கலாம் குணவர்மரே! ஆனால் இத்தனைப் பெரிய புறாவை நீங்கள் சாவகத்தின் காடுகளில் பார்த்திருக்க முடியாது. உங்கள் நாட்டு வணிகர்கள் எங்கள் புகார் நகருக்குப் பெரும் புறாக்களையும் நானாவிதக் கள்ளைகளையும், சாவகத்தின் காடுகளிலிருந்து கொண்டுவந்து அரண்மனைகளிலும் வணிகர் மாளிகைகளிலும் விற்கிறார்கள்.
நான் பார்த்திருக்கிறேன் அந்தப் புறாக்களை விளையாட்டுக்கும் உணவுக்கும் உங்கள் நாட்டுப் புறாக்கள் பயன்படுகின்றன. ஆனால் அறிவுச் செயல்களுக்கு அவை உதவுவதில்லை. இப்பொழுது கவனியுங்கள் இந்தப் புறாவை” என்று அவரிடம் தன் இடது கையைத் தூக்கி அதிலிருந்து புறாவைக் காட்டி, “கிட்டத்தட்ட வல்லூரின் அளவுக்கு இந்தப் புறா வளர்ந்திருக்கிறது. இந்தச் சாதிப் புறாக்கள் உலகிலேயே அபூர்வமானவை. ஒரே ஒரு இடத்தில்தான் இருக்கின்றன” என்றான். .
“எந்த இடம் அது? ” விஷயத்தைத் தெரிந்து கொள்வதற்காகக் கேட்டான் குணவர்மன்.
“பாரத நாட்டுக்கு மேல் திசையில் எரித்திரியக் கடல் இருக்கறது… ”
“ஆமாம். ”
“அதன் மூலம் அரபு நாடுகளுக்குச் செல்லும் வழியில் இடையே கடலில் இருக்கிறது பறவைத் தீவு எனும் ஒரு தீவு. ”
“அப்படியா? “
“ஆமாம் குணவர்மரே! அந்தப் பறவைத் தீவில்தான் இத்தகைய பெரும் புறாக்கள் கிடைக்கின்றன. அந்தத் இவை எந்த மரக்கலமும் அணுகுவதில்லை. அணுகும் கப்பல்களைக் கூட்டம் கூட்டமாக வரும் பறவைகள் அழித்துவிடும். ஆனால் தூரமாகப் பறந்து தனித்துவரும் சில புறாக்கள் வணிகர் கைகளில் சிக்குகின்றன. முக்கியமாக யவன வணிகர்கள்தான் இவற்றைப் பிடித்துக்கொண்டு வருகிறார்கள். அவற்றை எங்கள் நாட்டு யவன வீரர்கள் வாங்குகிறார்கள். ”
“வாங்கி? “
“தூது செல்லப் பழக்குகறார்கள். ”
இதைக் கேட்டதும் குணவர்மனுக்கும், காஞ்சனா தேவிக்கும் உண்மை மெல்ல மெல்லப் புரியலாயிற்று. “அப்படியானால் இதுவும் தூதுப் புறாவா? ” என்று ஏககாலத்தில் ஆச்சரியத்துடன் கேட்டார்கள்.
“ஆம்” என்பதற்கு அறிகுறியாகத் தலையை அசைத்த கருணாகர பல்லவன், “சந்தேகமில்லை குணவர்மரே! இந்தப் புறாவைப் பார்த்ததுமே இது தூதுப் புறாவென்பதைத் தெரிந்துகொண்டேன். இதன் பரிமாணமும் அலகும் நடத்தையும் அதைச் சந்தேகமற நிரூபித்தன” என்று வாய்விட்டுச் சொன்னான்.
“நடத்தையா? ” என்று வியப்புடன் வினவினாள் காஞ்சனாதேவி.
“ஆம் அரசகுமாரி! ஆண்டவன் சிருஷ்டிக்கும் ஒவ்வொரு ஜீவராசிக்கும் நடத்தை உண்டு. மற்ற ஜீவராசிகள் பிறக்கும்போது உள்ள நடத்தையைவிட்டு மாறுவதில்லை. மனிதன்தான் மாறுகிறான். உதாரணமாக இதோ பாருங்கள்” என்று கூறிவிட்டுக் கையிலிருந்த புறாவைப் பறக்கவிட்டான். அந்தப் புறா எந்த இடத்துக்கும் செல்லாமல் சிறகடித்து மீண்டும் முதலில் உட்கார்ந்திருந்த மஞ்சத்தின் முகப்பிலேயே வந்து உட்கார்ந்தது.
Credits -:
Book : கடல் புறா Kadal Pura
Author of book -: சாண்டில்யன்
Copyright © சாண்டில்யன், All rights reserved.
kadal pura,kadal pura book,kadal pura audiobook,kadal pura book pdf free download,kadal pura novel,kadal pura book online,kadal pura characters,kadal pura online reading,kadal pura audiobook free download,kadal pura movie,kadal pura novel in tamil,kadal pura part 3,kadal pura fish,kadal pura in tamil,sandilyan,sandilyan books,
sandilyan novels list in tamil download,sandilyan mma,sandilyan novels,sandilyan best novels,sandilyan novels list,sandilyan kadal pura,sandilyan font download,sandilyan meaning in tamil,sandilyan novels online purchase,sandilyan novel character names,sandilyan audiobooks,
sandilyan in tamil,audiobooks,audiobooks free,audiobook apps,audiobooks on spotify,audiobooks for kids,audiobook subscription,audiobooks amazon,audiobook speed calculator,audiobooksnow,audiobook narrator jobs,audiobook torrenting sites,
audiobooks on iphone,audiobook narrator salary,audiobook player,kalki book,kalki books in tamil,kalki book gore vidal,kalki book series,kalki book pdf,kalki book review,kalki book 3 pdf free download,kalki book in hindi pdf,kalki book summary,kalki book 2,kalki book in hindi,kalki books in english,kalki book 3,kalki books list in tamil,
kadal pura,kadal pura audiobook,kadal pura novel in tamil,kadal pura part 1,kadal pura part 3,kadal pura part 2,kadal pura story,kadal pura story line,kadal pura full story,kadal pura sandilyan novel,kadal pura novel,kadal pura audio book free download,kadal pura audiobook,கடல் புறா, Kadal Pura Novel Audiobook,Kadal Pura Audio Book,#KadalPura,
kadal pura,kadal pura audiobook,kadal pura novel in tamil,kadal pura part 3,kadal pura part 1,kadal pura part 2,kadal pura story,kadal pura novel,kadal pura audiobook free,kadal pura audio,kadal pura audiobook free download,kadal pura audiobook part 1,kadal pura audiobook part 2,kadal pura audiobook part 3,sandilyan kadal pura story ,kadal pura sandilyan novel,sandilyan audiobooks,கடல் புறா,kadal pura audio book,