AudiobooksKalki TimesSivagamiyin SabathamStoryTamil AudiobooksYoutube

Sivagamiyin Sabatham Full Story in 10 mins | Sivagamiyin Sabatham Audio Book Kalki Times

Sivagamiyin Sabatham Full Story in 10 mins | Sivagamiyin Sabatham Audio Book Kalki Times

Sivagamiyin Sabatham Full Story in 10 mins | Sivagamiyin Sabatham Audio Book Kalki Times

Sivagamiyin Sabatham Full Story in 10 mins

Book : சிவகாமியின் சபதம் | Sivagamiyin Sabatham
Author of book : கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி
Published : Weekly Issue 1944-1946, As a Book 1948

முதல் பாகம்: பரஞ்சோதி யாத்திரை

பரஞ்சோதியின் காஞ்சி வருகையுடன் இக்கதை தொடங்குகிறது. வழியில் எதிர்படும் சமணர்களினால் காஞ்சியில் ஏற்பட்ட மதமாற்றத்தை பற்றியும் நாம் அறியலாம். சமயக் குறவர் நால்வருள் ஒருவரான திருநாவுக்கரசரின் தாள்பணிந்து இறைதொண்டாற்ற நினைத்து காஞ்சி வந்தவர் விதிவசத்தால் ஆடலரசியும் பேரழகியுமான சிவகாமியையும் அவள் தந்தையும் தலைமை சிற்பியுமான ஆயனார் அவர்களையும் மதம்கொண்ட யானையின் பிடியிலிருந்து மீட்கிறார்.

இதனால் ஏற்பட்ட கலவரத்தை முன்னிட்டு பரஞ்சோதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார். பின்னர் தான் அவருக்கு காஞ்சியை நோக்கி சாளுக்ய மன்னன் புலிகேசி படையெடுத்து வருவதும் மன்னர் தன்னை நேரில் பார்த்து தன் வீரத்தை பாராட்டவே சிறையில் வைத்திருப்பதும் தெரிந்து கொள்கிறார். ஆனால், அதற்கு முன்பாகவே தன்னுடன் காஞ்சி வந்த நாகநந்தி அடிகள் என்னும் புத்த துறவியின் உதவியுடன் சிறையில் இருந்து தப்பிக்கிறார்.

ஒரு சுரங்கத்தின் வழியாக கோட்டை சுவரின் வெளியே அமைந்திருக்கும் ஆயனாரின் குடிசைக்குச் செல்கிறார்கள். தனது மாமாவின் துணையால் ஆயனரை பற்றி நன்கு அறிந்திருந்த பரஞ்சோதி அவரிடம் சீடனாக சேர்ந்து சிற்பக்கலையை கற்க நினைத்தார். மூலிகை ஓவியங்களில் மிகவும் ஈடுபாடு கொண்ட ஆயனர் நாகநந்தியிடம் அஜந்தா குகைகளில் இருக்கும் வண்ண ஓவியங்களை பற்றி வினவினார். அதன் பொருட்டு மேலும் விவரங்களை தெரிந்துகொள்ள நாகநந்தியின் சிறுகுறிப்பு ஒன்றுடன் விந்தய மலைத்தொடருக்கு பரஞ்சோதி அனுப்பப்படுகிறார்.

பரதத்தில் நன்கு தேர்ச்சிபெற்ற ஆடல் நங்கை சிவகாமியைக் காண, அவள் காதலனும் இளவரசருமான நரசிம்ம பல்லவர் வந்து செல்லும் விபரமறிந்த மன்னர் மகேந்திரவர்மர் இதற்கு சம்மதிக்காமல் இருந்தார். அவர் மனதை மாற்றும் பொருட்டு புலிகேசியுடன் போருக்கு செல்லும் நேரத்தில் காஞ்சியை காவல் புரியும் பொறுப்பை நரசிம்மரிடம் கொடுத்திருந்தார் பல்லவ மன்னர்.

விந்தய மலை செல்லும் வழியில் ஓரிரவில் பரஞ்சோதி, வஜ்ரபாஹு என்ற போர் வீரனை தங்கும் விடுதி ஒன்றில் சந்தித்தார். நடுநிசியில் பரஞ்ஜோதியிடம் இருந்த கடிதத்தின் விஷயத்தை அவர் அறியா வண்ணம் வஜ்ரபாஹு மாற்றியமைத்தான். விடியலில் இருவரும் பிரிந்துசென்றனர். அன்று எதிர்வந்த சாளுக்ய படையினரால் பரஞ்சோதி கைது செய்யப்பட்டார். பின்பு மன்னர் புலிகேசியிடம் கொண்டு செல்லப்பட்ட அவர் அங்கு விசாரிக்கப்பட்டார்.

மொழிப் பிரச்சனையின் காரணமாக பரஞ்சோதி வஜ்ரபாஹுவினால் விசாரிக்கப்பட்டு குற்றமற்றவர் என்று கூறப்பட்டார். வஜ்ரபாஹு கொடுத்த சமிக்யயுடன் அவனுடன் சில படை வீரர்கள் துணையுடன் தன் பயணத்தை தொடர்ந்தனர். அன்றிரவு மற்ற வீரர்கள் தூங்கும் பொழுது வஜ்ரபாஹு, பரஞ்சோதியை அழைத்துக்கொண்டு அவ்விடம் இருந்து தப்பித்து பல்லவர் படையிடம் வந்து சேர்ந்தனர். அங்கு வந்த பின்பே தன்னுடன் வந்த வஜ்ரபாஹு வேறொருவர் அன்றி மன்னர் மகேந்திரவர்மரே என்று அறிந்தார்.

இரண்டாம் பாகம்: காஞ்சி முற்றுகை

ஏழு மாதங்கள் கழிந்த பின்பு பரஞ்ஜோதி மகேந்திரவர்மரின் நன்மதிப்பை பெற்ற ஓர் சிறந்த படைத் தலைவனாக இருக்கிறார். சாளுக்யருடன் போர் நெருங்கிவரும் இவ்வேளையில் பரஞ்சோதி நாடு திரும்பி காஞ்சியில் இளவரசர் நரசிம்மருடன் மிகவும் நட்புடன் இருந்தார். தன் காதலியை சந்திக்காமல் நரசிம்மர் படும் வேதனைக்கு, பரஞ்ஜோதியின் நட்பு மருந்தாக இருந்தது.

இவ் இக்கட்டான நிலையில் பல்லவ படையின் தலைமை ஒற்றனான சத்ருக்னன் இடமிருந்து, காஞ்சி மீது படையெடுக்க எத்தனித்த துர்வநீதன் என்னும் சிற்றரசன் மீது போர்தொடுக்கும்படி மகேந்திர பல்லவரின் அரசாணை வந்து சேர்ந்தது. சிவகாமியிடம் சோழ பாண்டிய நாடுகளில் நடனமாடும் பெரிய வாய்ப்பு ஒன்றை வாங்கி தருவதாக கூறிய நாகநந்தி அவள் நல்மதிப்பைப் பெற்றான். போரைப் பற்றி எதுவும் அறியாத ஆயனாரிடம் நடக்க இருக்கும் விபரீதத்தினை எடுத்துரைத்த நாகநந்தி அவர்களை புத்த விஹாரம் ஒன்றில் தங்க வைத்தான்.

அங்கிருந்து துர்வீந்தன் மீது நரசிம்ம பல்லவர் படையெடுத்து செல்வதை கண்ட சிவகாமி அவரிடம் செல்ல நினைக்க, அக்கணம் வஞ்சக எண்ணம் கொண்ட நாகநந்தியால் உடைக்கப்பட்ட ஏரியினால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டாள். இதைக் கண்ட நரசிம்மர் அவளையும் ஆயனாரையும் பத்திரமாக மீட்கிறார்.

காஞ்சியின் மதில் சுவரை உடைத்து எறிய நினைத்து அங்கு வந்த புலிகேசிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. காஞ்சி அவ்வளவு வலிமையுடன் இருந்தது. இதனால் மனம் தளராத புலிகேசி கோட்டையின் வெளியிலே தண்டு இறங்கி பாசறை அமைத்து தங்கினான். உணவு தட்டுப்பாட்டின் காரணமாக காஞ்சி விரைவில் வீழும் என்று நினைத்தான் புலிகேசி. ஆனால் அவன் கூற்றைப் பொய்யாக்கும்படி காஞ்சியிடம் தேவைக்கு அதிகமாகவே உணவு இருப்பு இருந்தது. அதற்கு நேர் மாறாக சாளுக்ய படையிடம் உணவு தட்டுப்பாடு ஏற்பட்டது. இதன் காரணமாக யானைகளை கட்டுப்படுத்துவது மிகவும் சிரமமாக மாறியது.

தோல்வியை ஏற்க விரும்பாத புலிகேசி அமைதி தூது விடுத்து காத்திருந்தான். இதை சிறிதும் நம்பாத மன்னர் மகேந்திர பல்லவர், நரசிம்மரை தெற்கே சென்று பாண்டியனிடம் போர்புரிய அனுப்பிவிட்டு பின்பு புலிகேசியை அரண்மனைக்கு அழைத்தார். ராஜஉபசரிப்பையும், விருந்தோம்பலையும் நன்கு அனுபவித்தான்.

மன்னரின் வேண்டுகோளுக்கிணங்க மண்டபப்பட்டிலிருந்து வந்த சிவகாமி தன் நாட்டிய விருந்தால் புலிகேசியை மகிழ்வித்தால். அவளும் அவள் தந்தையும் கோட்டை வாயில் திறக்கும் வரை காஞ்சியிலே தங்கி இருந்தனர். புலிகேசி விடைபெறுமுன் வஜ்ரபாஹுவாய் வந்தது தாமே என்ற உண்மையை மகேந்திரர் போட்டுடைத்தார். இதனால் தனக்கு ஏற்பட்ட அவமானத்தை காட்டிக்கொள்ளாத புலிகேசி காஞ்சியை விட்டு வெளியேறிய பின்பு தன் படை வீரர்களிடம் கண்ணில் தென்படும் அனைத்தையும் அழிக்குமாறு உத்தரவிட்டான். மற்றும் மகேந்திரவர்மரின் கலைஞர்களின் கரங்களை துண்டிக்கவும் ஆணையிட்டான்.

நடக்கப்போகும் விபரீதமறியா ஆயனார், சிவகாமியுடன் சுரங்கம் ஒன்றின் வழியாக காஞ்சியை விட்டு வெளியேறி புலிகேசியிடம் மாட்டிக்கொண்டார். புலிகேசியை போல் வேடம் புனைந்த நாகநந்தி ஆயநாரை மட்டும் காவலர்களிடமிருந்து மீட்டான் (இவ்விடம் புலிகேசியும் நாகநந்தியும் இரட்டை சகோதரர்கள் என்பதை தெரியபடுத்திக் கொள்கிறார்கள்).

புலிகேசியுடன் எதிர்கொண்ட போரில் மகேந்திரவர்மர் பலத்த காயமடைகிறார். மரணப்படுக்கையில் அவர் சாளுக்ய மன்னனுடன் அமைதி உடன்பாடு கொண்டதின் தவற்றை உணர்ந்தார். இக்களங்கத்தைப் போக்க நரசிம்மப் பல்லவரை சாளுக்ய நாடு சென்று சிவகாமியை புலிகேசியின் பிடியிலிருந்து மீட்டுவரும்படி கூறுகிறார்.

மூன்றாம் பாகம்: பிக்ஷுவின் காதல்

சிவகாமி, மற்ற கைதிகளுடன் வாதாபி கொண்டுசெல்லப்பட்டாள். புலிகேசியிடம், தான் சிவகாமியின்பால் காதல் கொண்ட உண்மையை நாகநந்தி தெரிவித்தான். பின்பு புலிகேசி சிவகாமியை பார்த்துகொள்வேன் என்று வாக்களித்த பின்பு போர்முனையை தான் பார்த்துக்கொள்வதாக கூறி புறப்பட்டான்.

வாதாபியில் பல்லவரை வென்று வாகை சூடியதாகக் கூறி வெற்றி முழக்கமிட்டான். தன் சபையில் வீற்றிருக்கும் பாரசீக தூதுவர்முன் ஆட மறுத்த சிவகாமியை ஆட வைப்பதற்காக தான் பிடித்து வந்த பல்லவ நாட்டினரை சிவகாமியின் முன் கொடுமைப் படுத்தினான். இம்முறையை தினமும் பின்பற்றி அவளை ஆடச்செய்தான். இதனால் மனம் வெதும்பிய சிவகாமி சீற்றம் கொண்டு சினத்துடன் ஓர் சபதம் கொண்டாள்.

தன் காதலர் நரசிம்ம பல்லவர் இவ்வாதாபி நகரத்தை தீக்கிரையாக்கி தன்னை மீட்டுச் செல்லும் வரை தான் அந்நகர் விட்டு வெளியேறுவதில்லை என்று சூளுரைத்தாள். பின்பு ஒருமுறை தன்னை அழைத்துச்செல்ல ரகசியமாய் வந்த நரசிம்மரிடமும் இதையே கூறி உடன் செல்ல மறுத்தாள்.

நான்காம் பாகம்: சிதைந்த கனவு

காலம் உருண்டோடி ஒன்பது ஆண்டுகள் கடந்தன. புலிகேசியுடன் ஏற்பட்ட போரினால் காயமுற்று மரணபடுக்கையில் இருந்த மாமன்னர் மகேந்திர பல்லவர் அதிலிருத்து மீளாமலேயே வீரமரணமெய்தினார். தந்தைக்குப் பின் முடிசூடிய நரசிம்மவர்மர், பாண்டிய இளவரசி வானமாதேவியை மனம்புரிந்திருந்தார்.

ஆனால் வாதாபியை நோக்கி படையெடுப்பில், அவரது முனைப்பு சிறிதும் குறையாமல் இருந்தது. இதற்கிடையே புலிகேசிக்கும், நாகநந்திக்கும் இடையேயான கருத்துவேறுபாடுகள் அதிகரித்து இருந்தது. தான் நாட்டை துறந்து, பதவியாசையை விட்டு துறவறம் புரிந்தது தவறென்று எண்ணினான். இதன் பொருட்டு பல்லவர்கள் படையெடுப்பை பற்றி தெரிந்தும் அவன் அதைக் கூறாமல் மறைத்தான். இவனது எல்லா மனக்குழப்பத்திற்கும், சிவகாமி அவனை மணப்பதற்கு சம்மதிக்காமையே காரணமாகும்.

புலிகேசி அஜந்தாவில் நடைபெறும் கலாசார விழாவிற்கு சென்றிருந்த வேளையில் பல்லவர் படை வாதாபிக் கோட்டையை சூழ்ந்தது. இதை சற்றும் எதிர்காணா வாதாபி பல்லவரிடம் பணிய முனைந்தது. இதற்கிடைய விபரமறிந்து விரைந்து வந்த புலிகேசியின் படையுடன் கோட்டைக்கு அப்பால் போர் நடந்தது. இதில் மன்னன் புலிகேசி கொல்லப்பட்டான்.

யாரும் இதை அறியும் முன்பாக நாகநந்தி தன் சகோதரனின் உடலை எடுத்துச்சென்று அதனை சிதையிலிட்டான். பின்பு சுரங்கப் பாதை மூலம் நகரினுள் வந்த நாகநந்தி புலிகேசிபோல் வேடமிட்டு போர்க்களம் வந்தான். முன்னர் அறிவித்த அடிபணியும் அறிவிப்பையும் நீக்கினான். இதனால் கோபமுற்ற நரசிம்ம பல்லவர் வாதாபியை தீக்கிரையாக்க கட்டளையிட்டார்.

இக்கதையின் முடிவாக ஒருகை இழந்த நாகநந்தி பரஞ்சோதியால் புத்த துறவி என்ற காரணத்தினால் உயிருடன் விடப்பட்டான். போரினால் தான் பாவம் செய்ததாக நினைத்த பரஞ்சோதி பின் சைவதுறவியாக மாறினார். நாடு திரும்பிய சிவகாமி தன் காதலன் இன்னொருப் பெண்ணின் கணவரென்பதையறிந்து தன் கனவு சிதைந்ததை எண்ணி மனத்தால் இறந்தாள். பின் தன் பரதக் கலைக்கே தன்னை அர்ப்பணிக்கும் விதமாக காஞ்சி ஏகாம்பரேஸ்வரருக்கே திருமாங்கல்யம் கட்டிக் கொண்டாள். இக்காட்சியுடன் இக்கதை முடிவடைகிறது.


Sivagamiyin Sabatham Popular Tags:

sivagamiyin sabatham,sivagamiyin sabatham story in tamil,sivagamiyin sabatham audio book,sivagamiyin sabatham full story in tamil,sivagamiyin sabatham story,sivagamiyin sabatham part 1,sivagamiyin sabatham part 2,sivagamiyin sabatham part 3,sivagamiyin sabatham part 4,kalki sivagamiyin sabatham audio book ,kalki sivagamiyin sabatham,kalki times,kalki times sivagamiyin sabatham,sivagamiyin sabatham kalki times,சிவகாமியின் சபதம்,

sivagamiyin sabatham,sivagamiyin sabatham book,sivagamiyin sabatham audio book,sivagamiyin sabatham podcast,sivagamiyin sabatham pdf with pictures,sivagamiyin sabatham book online,sivagamiyin sabatham full book pdf,sivagamiyin sabatham all parts,sivagamiyin sabatham how many parts,sivagamiyin sabatham tamil,sivagamiyin sabatham part 2 pdf free download,sivagamiyin sabatham part 1 pdf free download,sivagamiyin sabatham tamil movie,sivagamiyin sabatham part 1,sivagamiyin sabatham audio book,sivagamiyin sabatham audio book by sri,sivagamiyin sabatham audio book bombay kannan,kalki sivagamiyin sabatham audio book,

sivagamiyin sabatham story,sivagamiyin sabatham story in tamil,sivagamiyin sabatham story in tamil pdf,sivagamiyin sabatham novel download,sivagamiyin sabatham real story,sivagamiyin sabatham summary,sivagamiyin sabatham novel,sivagamiyin sabatham novel in tamil,sivagamiyin sabatham novel pdf free download,sivagamiyin sabatham novel download,sivagamiyin sabatham book,sivagamiyin sabatham book pdf,sivagamiyin sabatham book price,sivagamiyin sabatham book review,sivagamiyin sabatham book in tamil,sivagamiyin sabatham book in english,sivagamiyin sabatham tamil novel free download

சிவகாமியின் சபதம்,சிவகாமியின் சபதம் கதாபாத்திரங்கள்,சிவகாமியின் சபதம் புத்தகம்,சிவகாமியின் சபதம் pdf free download,சிவகாமியின் சபதம் நாவல்,சிவகாமியின் சபதம் book pdf,சிவகாமியின் சபதம் கதை சுருக்கம் ,சிவகாமியின் சபதம் புத்தக விமர்சனம்,சிவகாமியின் சபதம் book,சிவகாமியின் சபதம் திரைப்படம்,சிவகாமியின் சபதம் audio,சிவகாமியின் சபதம் book price,சிவகாமியின் சபதம் நாவல் pdf,சிவகாமியின் சபதம் review

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *