Thyaga Bhoomi Kalki Part4-2 Ilavenil
அத்தியாயம் 30
தீர்ப்பு
சென்னை ஹைகோர்ட்டின் சரித்திரத்தில், இந்த உமாராணி-ஸ்ரீதரன் வழக்கைப்போல் ஜனங்களின் மனத்தைக் கவர்ந்த வழக்கு வேறு நடந்ததில்லையென்று சொல்லலாம். நாலுபேர் கூடுமிடங்களிலெல்லாம் இதே பேச்சாகத்தான் இருந்தது. கேஸ் நடக்கும் தினங்களில் மாலை வேளையில் கடற்கரைக்குப் போனால், வெண் மணலில் கும்பல் கும்பலாக உட்கார்ந்திருந்தவர்களுடைய பேச்சில் உமாராணி-ஸ்ரீதரன் என்ற பெயர்கள் அடிக்கடி கேட்கக் கூடிய நிலையில் இருந்தன. அநேகம் பேர், கையில் அன்று வந்த பத்திரிகையைப் பிரித்து வைத்துக் கொண்டிருந்தார்கள். தினசரிகளில் ‘லீகல் காலம்’ என்று சொல்லப்படும் கோர்ட் நடவடிக்கைகள் பிரசுரிக்கும் பத்திக்கு இவ்வளவு முக்கியம் இதற்கு முன் எப்போதும் ஏற்பட்டது கிடையாது.
இன்னும் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், இந்த வழக்கு விஷயத்தில் ஸ்திரீகள் காட்டிய சிரத்தையேயாகும். வீட்டிலும் சரி, வெளியிலும் சரி, பெண்மணிகள் இரண்டு மூன்று பேர் சேர்ந்தால், உடனே உமாராணியின் பேச்சுத்தான் கிளம்பும். அபிப்பிராய பேதங்கள் வாதப் பிரதி வாதங்கள் இல்லாமலில்லை. பொதுவாக, இளம் பெண்கள் எல்லாரும் உமாராணியின் கட்சி பேசினார்கள். “ஆமாம்; அவள் கேட்பது நியாயந்தானே? புருஷர்கள் என்ன வேணுமானாலும் செய்யலாம், அதற்குக் கேள்வி முறை கிடையாது; பொம்மனாட்டிகள் மட்டும் எப்போதும் அடிமையாயிருக்க வேண்டுமென்று எந்த சாஸ்திரத்தில் சொல்லியிருக்கிறது? அது என்ன நியாயத்தில் சேர்ந்தது? நன்றாய்ச் சொன்னாள், ‘புருஷனுக்கு ஜீவனாம்சம் தருகிறே’னென்று!” – இம்மாதிரி படித்த யுவதிகளும், மாதர் விடுதலை இயக்கத்தில் சேர்ந்த மாது சிரோமணிகளும் பேசினார்கள். பழைய கர்நாடகத்தில் பற்றுள்ள வயதான ஸ்திரீகளோ, “இது என்ன அநியாயம்? புருஷனுக்குப் பெண்டாட்டி ஜீவனாம்சம் கொடுக்கிறதாமே? அப்படி அந்த உமாராணி நடுக்கோர்ட்டிலே சொன்னாளாமே? என்ன இருந்தாலும் ஒரு பொம்மனாட்டிக்கு இவ்வளவு தைரியம் ஆகுமோ?” என்றார்கள். இந்த மாதிரி வாதப் பிரதிவாதங்கள் ஒவ்வொரு வீட்டிலும் நடந்து கொண்டிருந்தன.
சுதந்திர ஸ்திரீ சமாஜத்தைச் சேர்ந்த ஸ்திரீகள் சிலர் உமாராணியிடம் அநுதாபம் காட்டுவதற்காகப் பொதுக் கூட்டம் கூட்ட வேண்டுமென்றும், உமாராணியின் பக்கம் தீர்ப்புச் சொல்ல வேண்டுமென்பதாக நீதிபதிக்கு ஒரு மகஜர் அனுப்ப வேண்டுமென்றும் முயற்சி செய்தார்கள். இம்மாதிரியெல்லாம் செய்வது ‘கண்டெம்ப்ட் ஆப் கோர்ட்’, அதாவது கோர்டை அவமதிக்கும் குற்றமாகும் என்று சிலர் எடுத்துக் காட்டியதன் மேல் மேற்படி முயற்சி கைவிடப்பட்டது.
இப்படி ஜனங்களிடையில் அளவில்லாத ஆவலையும் பரபரப்பையும் உண்டு பண்ணியிருந்த வழக்கில் கடைசியாகத் தீர்ப்புச் சொல்லும் நாள் வந்தது. அன்று சாயங்காலம் தினசரிப் பத்திரிகைகளுக்கு ஏற்பட்ட கிராக்கி, காந்திமகான் கைதியான அன்று ஏற்பட்ட கிராக்கிக்குச் சமமாக இருந்தது.
நீதிபதி இரு தரப்பு வாதங்களையும் சாங்கோபாங்கமாக எடுத்து அலசி ஆராய்ந்து விட்டுக் கடைசியில் பின் வருமாறு தீர்ப்பை முடித்திருந்தார்.
“பிரதிவாதியாகிய ஸ்ரீமதி உமாராணி தம்முடைய கட்சியை மிகவும் பாராட்டத் தக்க முறையில் எடுத்துச் சொன்னார். அவருடைய வாழ்க்கை வரலாறு கல் நெஞ்சையும் உருக்கக் கூடியதாகும். ஹிந்து சமூக வாழ்க்கையிலுள்ள அநீதிகளுக்கு அவர் ரொம்பவும் உள்ளானவர் என்று நிச்சயமாய்த் தெரிகிறது. எல்லாவிதத்திலும் அவர் நம்முடைய அநுதாபத்துக்குப் பாத்திரமாயிருக்கிறார். தர்மமும் நியாயமும் பிரதிவாதியின் கட்சியில் தான் இருக்கின்றன என்பதில் சந்தேகமில்லை. ஆனால், துரதிஷ்டவசமாக, சட்டம் அவர் கட்சியில் இல்லை. ஆணுக்கும் பெண்ணுக்கும் சம உரிமை வேணுமென்று அவர் கேட்பது தர்ம நியாயமாயிருக்கலாம்; ஆனால் அவருடைய கோரிக்கையை இப்போதுள்ள சட்டம் அங்கீகரிக்கவில்லை. சட்டம் பிசகானதாயிருந்தால், அதைத் திருத்த வேண்டியது சட்ட நிபுணர்கள் – அரசியல் வாதிகள் இவர்களுடைய கடமை. நான் இப்போது அமுலிலுள்ள சட்டத்தின்படிதான் தீர்ப்புச் சொல்ல வேண்டும். சாதாரணமாக, ஒரு புருஷன் தன்னுடைய மனைவி தன்னுடன் வசிக்க வேண்டுமென்று கோருவதற்குப் பாத்தியதை உண்டென்று சட்டம் சொல்கிறது. இந்த வழக்கில் பிரதிவாதியை வாதி கொடூரமாக ஹிம்ஸித்ததாய் ருசுவாகவில்லை. ஆகவே, உமாராணி என்கிற சாவித்திரி அம்மாள் அவளுடைய புருஷன் ஸ்ரீதரன் என்பவருடன் சேர்ந்து வசிக்க வேண்டும் என்பதாகத் தீர்ப்பளிக்கிறேன்.” தீர்ப்பு சென்னை ஹைகோர்ட்டின் சரித்திரத்தில், இந்த உமாராணி-ஸ்ரீதரன் வழக்கைப்போல் ஜனங்களின் மனத்தைக் கவர்ந்த வழக்கு வேறு நடந்ததில்லையென்று சொல்லலாம். நாலுபேர் கூடுமிடங்களிலெல்லாம் இதே பேச்சாகத்தான் இருந்தது. கேஸ் நடக்கும் தினங்களில் மாலை வேளையில் கடற்கரைக்குப் போனால், வெண் மணலில் கும்பல் கும்பலாக உட்கார்ந்திருந்தவர்களுடைய பேச்சில் உமாராணி-ஸ்ரீதரன் என்ற பெயர்கள் அடிக்கடி கேட்கக் கூடிய நிலையில் இருந்தன. அநேகம் பேர், கையில் அன்று வந்த பத்திரிகையைப் பிரித்து வைத்துக் கொண்டிருந்தார்கள். தினசரிகளில் ‘லீகல் காலம்’ என்று சொல்லப்படும் கோர்ட் நடவடிக்கைகள் பிரசுரிக்கும் பத்திக்கு இவ்வளவு முக்கியம் இதற்கு முன் எப்போதும் ஏற்பட்டது கிடையாது.
இன்னும் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், இந்த வழக்கு விஷயத்தில் ஸ்திரீகள் காட்டிய சிரத்தையேயாகும். வீட்டிலும் சரி, வெளியிலும் சரி, பெண்மணிகள் இரண்டு மூன்று பேர் சேர்ந்தால், உடனே உமாராணியின் பேச்சுத்தான் கிளம்பும். அபிப்பிராய பேதங்கள் வாதப் பிரதி வாதங்கள் இல்லாமலில்லை. பொதுவாக, இளம் பெண்கள் எல்லாரும் உமாராணியின் கட்சி பேசினார்கள். “ஆமாம்; அவள் கேட்பது நியாயந்தானே? புருஷர்கள் என்ன வேணுமானாலும் செய்யலாம், அதற்குக் கேள்வி முறை கிடையாது; பொம்மனாட்டிகள் மட்டும் எப்போதும் அடிமையாயிருக்க வேண்டுமென்று எந்த சாஸ்திரத்தில் சொல்லியிருக்கிறது? அது என்ன நியாயத்தில் சேர்ந்தது? நன்றாய்ச் சொன்னாள், ‘புருஷனுக்கு ஜீவனாம்சம் தருகிறே’னென்று!” – இம்மாதிரி படித்த யுவதிகளும், மாதர் விடுதலை இயக்கத்தில் சேர்ந்த மாது சிரோமணிகளும் பேசினார்கள். பழைய கர்நாடகத்தில் பற்றுள்ள வயதான ஸ்திரீகளோ, “இது என்ன அநியாயம்? புருஷனுக்குப் பெண்டாட்டி ஜீவனாம்சம் கொடுக்கிறதாமே? அப்படி அந்த உமாராணி நடுக்கோர்ட்டிலே சொன்னாளாமே? என்ன இருந்தாலும் ஒரு பொம்மனாட்டிக்கு இவ்வளவு தைரியம் ஆகுமோ?” என்றார்கள். இந்த மாதிரி வாதப் பிரதிவாதங்கள் ஒவ்வொரு வீட்டிலும் நடந்து கொண்டிருந்தன.
சுதந்திர ஸ்திரீ சமாஜத்தைச் சேர்ந்த ஸ்திரீகள் சிலர் உமாராணியிடம் அநுதாபம் காட்டுவதற்காகப் பொதுக் கூட்டம் கூட்ட வேண்டுமென்றும், உமாராணியின் பக்கம் தீர்ப்புச் சொல்ல வேண்டுமென்பதாக நீதிபதிக்கு ஒரு மகஜர் அனுப்ப வேண்டுமென்றும் முயற்சி செய்தார்கள். இம்மாதிரியெல்லாம் செய்வது ‘கண்டெம்ப்ட் ஆப் கோர்ட்’, அதாவது கோர்டை அவமதிக்கும் குற்றமாகும் என்று சிலர் எடுத்துக் காட்டியதன் மேல் மேற்படி முயற்சி கைவிடப்பட்டது.
இப்படி ஜனங்களிடையில் அளவில்லாத ஆவலையும் பரபரப்பையும் உண்டு பண்ணியிருந்த வழக்கில் கடைசியாகத் தீர்ப்புச் சொல்லும் நாள் வந்தது. அன்று சாயங்காலம் தினசரிப் பத்திரிகைகளுக்கு ஏற்பட்ட கிராக்கி, காந்திமகான் கைதியான அன்று ஏற்பட்ட கிராக்கிக்குச் சமமாக இருந்தது.
நீதிபதி இரு தரப்பு வாதங்களையும் சாங்கோபாங்கமாக எடுத்து அலசி ஆராய்ந்து விட்டுக் கடைசியில் பின் வருமாறு தீர்ப்பை முடித்திருந்தார்.
“பிரதிவாதியாகிய ஸ்ரீமதி உமாராணி தம்முடைய கட்சியை மிகவும் பாராட்டத் தக்க முறையில் எடுத்துச் சொன்னார். அவருடைய வாழ்க்கை வரலாறு கல் நெஞ்சையும் உருக்கக் கூடியதாகும். ஹிந்து சமூக வாழ்க்கையிலுள்ள அநீதிகளுக்கு அவர் ரொம்பவும் உள்ளானவர் என்று நிச்சயமாய்த் தெரிகிறது. எல்லாவிதத்திலும் அவர் நம்முடைய அநுதாபத்துக்குப் பாத்திரமாயிருக்கிறார். தர்மமும் நியாயமும் பிரதிவாதியின் கட்சியில் தான் இருக்கின்றன என்பதில் சந்தேகமில்லை. ஆனால், துரதிஷ்டவசமாக, சட்டம் அவர் கட்சியில் இல்லை. ஆணுக்கும் பெண்ணுக்கும் சம உரிமை வேணுமென்று அவர் கேட்பது தர்ம நியாயமாயிருக்கலாம்; ஆனால் அவருடைய கோரிக்கையை இப்போதுள்ள சட்டம் அங்கீகரிக்கவில்லை. சட்டம் பிசகானதாயிருந்தால், அதைத் திருத்த வேண்டியது சட்ட நிபுணர்கள் – அரசியல் வாதிகள் இவர்களுடைய கடமை. நான் இப்போது அமுலிலுள்ள சட்டத்தின்படிதான் தீர்ப்புச் சொல்ல வேண்டும். சாதாரணமாக, ஒரு புருஷன் தன்னுடைய மனைவி தன்னுடன் வசிக்க வேண்டுமென்று கோருவதற்குப் பாத்தியதை உண்டென்று சட்டம் சொல்கிறது. இந்த வழக்கில் பிரதிவாதியை வாதி கொடூரமாக ஹிம்ஸித்ததாய் ருசுவாகவில்லை. ஆகவே, உமாராணி என்கிற சாவித்திரி அம்மாள் அவளுடைய புருஷன் ஸ்ரீதரன் என்பவருடன் சேர்ந்து வசிக்க வேண்டும் என்பதாகத் தீர்ப்பளிக்கிறேன்.” “அந்த மாதிரி ஒண்ணும் பயப்படாதேங்கோ. என் குழந்தையை விட்டுட்டு, நான் செத்து கித்துப் போயிட மாட்டேன்” என்றாள் உமா.
இதைக் கேட்டுக் கொண்டே சம்பு சாஸ்திரி உள்ளே வந்தார். வக்கீல் விடைபெற்றுக் கொண்டு போனதும் அவர் சாவித்திரியின் பக்கத்தில் போய் ஸோபாவில் உட்கார்ந்தார்.
“நீ கடைசியிலே சொன்னது என் காதிலே விழுந்தது, சாவித்திரி!” என்றார்.
“ஆமாம், அப்பா! நான் செத்துக் கித்துப் போக மாட்டேன். நீங்களும் கவலைப்படாமலிருங்கோ!” என்றாள் சாவித்திரி.
“ரொம்ப சந்தோஷம், அம்மா! போனதெல்லாம் போகட்டும். நம்முடைய கஷ்ட காலமெல்லாம் தீர்ந்து போச்சு, இனிமேல் ஸ்ரீதரனும் சரியாயிருப்பான். இவ்வளவு பெரிய வீட்டிலே அவன் ஒருத்தனுக்குத்தானா இடமில்லை? அவனும் வந்து இருந்துட்டுப் போகட்டும்” என்றார் சாஸ்திரி.
“என்ன அப்பா சொன்னேள்? கோர்ட்டிலே கேஸ் போட்டு ஜெயிச்ச மனுஷரோடே என்னை இருந்து வாழச் சொல்றேளா? அது மாத்திரம் சொல்லாதேங்கோ. அப்பா! என்னால் முடியவே முடியாது!” என்று சாவித்திரி ஆத்திரத்துடன் கூறியபோது சாஸ்திரி உண்மையில் பயந்தே போனார்.
ஒரு நிமிஷம் கழித்து அவர், சாந்தமான குரலில், “சாவித்திரி! உனக்குத் தெரியாததற்கு நான் சொல்லப் போறதில்லை; இருந்தாலும் நீ இப்படிப் பிடிவாதம் பிடிக்கக் கூடாது. அந்தக் காலத்தில் உன் பெயர் கொண்ட சாவித்திரி என்ன செய்தாள், உனக்குத் தெரியாதா? அவள் யமனோடு போய்ப் போராடிச் சத்தியவானுடைய உயிரைக் கொண்டு வரவில்லையா? அப்பேர்ப்பட்ட உத்தமிகள் பிறந்த தேசத்தில் பிறந்துவிட்டு…” என்று சொல்லி வருகையில், சாவித்திரி குறுக்கிட்டாள்.
“அந்தக் கதையெல்லாம் இப்போது ஏன் சொல்கிறேள் அப்பா! அந்த சத்தியவான் இப்படித்தான் சாவித்திரியைச் சந்தியிலே விட்டிருந்தானா? எட்டு மாதத்துக் கர்ப்பிணியைத் தெருவிலே விரட்டியடித்தானா? இருக்காளா, செத்தாளா என்று கூடப் பார்க்காமல் இருந்தானா? அந்தப் பழைய கதையெல்லாம் இந்தக் காலத்துக்குப் பொருந்தாது, அப்பா!” என்றாள்.
“பழைய கதை வேண்டாம்; இந்தக் காலத்திலே நடக்கிறதைத்தான் கொஞ்சம் கவனியேன். அம்மா! நம் தேசத்திலே இப்போது எவ்வளவு பேர் எத்தனை மகத்தான தியாகங்கள் எல்லாம் செய்கிறார்கள்? பாரத தேசம் ஆதி காலத்திலிருந்தே தியாகத்துக்குப் பேர் போனதம்மா! அதனாலேதான் இந்த தேசத்தைத் தியாக பூமி என்று சொல்கிறார்கள். நீயும் கொஞ்சம் தியாகம் செய்யப்படாதா?” என்று சம்பு சாஸ்திரி கனிவு ததும்பிய குரலில் கேட்டார்.
ஆனால், சாவித்திரியின் மனம் கொஞ்சங்கூடக் கனியவில்லையென்று அவளுடைய பதிலிலிருந்து தெரிந்தது.
“தியாகமா, அப்பா! எப்பேர்ப்பட்ட தியாகம் வேணுமானாலும் நான் செய்யத் தயார், அப்பா! ஆனால் சுதந்திரத்துக்காக தான் தியாகம் செய்வேன்; அடிமைத்தனத்துக்காகத் தியாகம் செய்யமாட்டேன். இந்தக் காலத்தில் நமது தேசத்தில் தியாகம் செய்கிறவர்கள் எல்லாம் விடுதலைக்காகத் தியாகம் செய்கிறார்களா, அடிமைத்தனத்துக்காகத் தியாகம் செய்கிறார்களா, அப்பா?”
“சாவித்திரி! உனக்கு எப்போதும் பிடிவாதம் மாத்திரம் ஜாஸ்தி, அம்மா!” என்று சாஸ்திரி சிறிது கோபம் தொனித்த குரலில் சொன்னார்.
அந்தச் சமயத்தில், தெருவில் தேச சேவிகைகள் தேசிய பஜனை செய்து கொண்டு வந்த சப்தம் கேட்டது. “பாரத மாதாகி ஜே!” “மகாத்மா காந்திகி ஜே!” என்ற கோஷம் எழுந்தது. சாவித்திரி எழுந்திருந்து ஜன்னலண்டை சென்று பார்த்தாள். தேசீயக் கொடி தாங்கிய தேச சேவிகைகள்:
“பந்த மகன்று நம்திரு நாடு உய்ந்திட வேண்டாமோ?”
என்ற கீதத்தைப் பாடிக்கொண்டு போனார்கள். அவர்கள் தெருவைக் கடந்து செல்லும் வரையில் சாவித்திரி அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தாள். பிறகு விரைந்து தன் உடைகள் வைத்திருந்த அறைக்குள் சென்றாள். தான் அணிந்திருந்த விலை யுயர்ந்த ஆபரணங்களையெல்லாம் கழற்றி வைத்தாள். ஏற்கெனவே தயாராக வாங்கி வைத்திருந்த ஆரஞ்சு நிறக் கதர்ப்புடவையை எடுத்து உடுத்திக் கொண்டாள். அப்பாவிடமும் குழந்தையிடமுங்கூடச் சொல்லிக் கொள்ளாமல் வெளிக் கிளம்பிச் சென்றாள்.