tirupati latest news ஊரடங்கு காலத்தில் திருப்பதியில் தரிசனம் செய்யமுடியுமா? தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு
tirupati latest news ஊரடங்கு காலத்தில் திருப்பதியில் தரிசனம் செய்யமுடியுமா? தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு
ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்ய நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்த வண்ணம் இருந்தனர். ஆனால் கொரோனா கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ள சூழலில் பக்தர்களின் எண்ணிக்கை குறைந்த வண்ணம் இருக்கிறது. இதன் காரணமாக உண்டியல் வசூலும் குறைந்துள்ளது. கடந்த செவ்வாய் அன்று வெறும் 4,723 பேர் மட்டுமே சாமி தரிசனம் செய்துள்ளனர்.
அன்றைய தினம் ரூ. 39 லட்சம் மட்டுமே உண்டியலில் வசூலாகியுள்ளது. ஆந்திர மாநிலத்தில் வரும் 18ஆம் தேதி வரை நள்ளிரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இந்த நேரத்தில் அனைத்து கடைகள், உணவகங்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டிருக்கும். கட்டுப்பாடுகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதை திருப்பதி எஸ்பி வெங்கட அப்பாலா நாயுடு, சித்தூர் எஸ்பி செந்தில் குமார், அனந்தபூர் எஸ்பி சத்ய யேசு பாபு ஆகியோர் சம்பந்தப்பட்ட பகுதிகளில் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இதுதொடர்பாக பேசிய யேசு பாபு, ஆம்புலன்ஸ், அவசர கால மற்றும் அத்தியாவசிய சேவை அளிக்கும் வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். ஆட்டோ, டாக்ஸி ஆகியவற்றிற்கு ஊரடங்கு நேரத்தில் அனுமதி கிடையாது. அரசின் உத்தரவிற்கு பொதுமக்கள் உரிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இந்த நேரத்தில் வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய முடியுமா என்ற கேள்வி எழுந்தது. இதற்கு தீர்வு காணும் வகையில் திருப்பதி தேவஸ்தானம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, அலிபிரி சோதனைச் சாவடியில் நள்ளிரவு 12 மணியை தாண்டி வருகை புரிந்தாலும் தரிசன டிக்கெட்களை காட்டினால் திருமலைக்கு செல்ல அனுமதி அளிக்கப்படும்.
பக்தர்கள் பலரும் ஒரு மாதத்திற்கு முன்னரே ஏழுமலையானை தரிசிக்க டிக்கெட், தங்கும் வசதி, போக்குவரத்து ஆகியவற்றை முன்பதிவு செய்திருக்கின்றனர். அவர்கள் பாதிக்கப்படாத வகையில் இத்தகைய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலத்தில் கொரோனா பாதிப்பு குறித்து இரண்டு வாரங்கள் கழித்து ஆய்வு செய்யப்படும். அதைக் கருத்தில் கொண்டு அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுக்க அரசு திட்டமிட்டுள்ளது.
tirupati lockdown,tirupati live darshan,tirupati live news,tirupati latest news,tirupati latest news in tamil,tirupati darshan,tirupati latest news in tamil,tirupati latest news,tirupati special entry darshan,tirupati special darshan,
tirupati special entry darshan tamil,tirupati special darshan ticket,tirupati special entry darshan booking,tirupati devasthanam,tirupati devasthanam news,tirupati corona news,tirupati covid darshan,tirupati accommodation rooms,tirupati ttd accommodation,tirupati free darshan,tirupati free darshan token,